
முட்டை, உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் ஒரு சத்தான உணவு. இது புரதம், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்தது, ஆனால் அதே நேரத்தில் கொலஸ்ட்ரால் பற்றிய கவலைகளும் இதோடு தொடர்புபடுத்தப்படுது. 30 வயதுக்கு மேல் இருக்கறவங்களுக்கு, உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கறது முக்கியமாகுது. குறிப்பாக இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை, மற்றும் வாழ்க்கை முறை நோய்களை தவிர்க்கறது. இந்த வயதில், முட்டையை தினமும் சாப்பிடலாமா, இல்லையா, இதுக்கு எவ்வளவு அளவு பாதுகாப்பானதுனு கேள்விகள் எழுவது இயற்கை. இந்தக் கட்டுரையில், முட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு, 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இதை தினமும் உண்ணலாமா? என்று பார்ப்போம்.
முட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு
முட்டை, ஒரு சிறந்த புரத ஆதாரமாக இருக்கு. ஒரு சராசரி முட்டையில் (50 கிராம்) உள்ள சத்துக்கள் இதோ:
புரதம்: 6-7 கிராம், தசைகளை வலுப்படுத்தவும், உடல் பராமரிப்புக்கும் உதவுது.
வைட்டமின் B12, D, மற்றும் E, நரம்பு மண்டலத்தையும், எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துது.
செலினியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு, நோய் எதிர்ப்பு மற்றும் இரத்த உற்பத்திக்கு உதவுது.
ஒரு முட்டையில் சுமார் 186 மி.கி. கொலஸ்ட்ரால் உள்ளது, இது மஞ்சள் கருவில் இருக்கு.
கொழுப்பு: 5 கிராம், இதில் 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு.
30 வயதுக்கு மேல் முட்டை தினமும் சாப்பிடலாமா?
30 வயதுக்கு மேல் இருக்கறவங்களுக்கு, உடல் மாற்றங்கள், மெட்டபாலிச வேகம் குறையறது, மற்றும் இதய நோய்கள், நீரிழிவு போன்றவற்றுக்கு ஆபத்து அதிகரிக்கலாம். முட்டையை தினமும் சாப்பிடறது பாதுகாப்பானதா இல்லையானு பார்க்கும்போது, பல காரணிகளை கவனிக்கணும்:
நன்மைகள்:
30 வயதுக்கு மேல், தசை இழப்பு (Sarcopenia) தொடங்கலாம். முட்டையில் உள்ள புரதம், தசைகளை பராமரிக்க உதவுது. தினமும் ஒரு முட்டை, உடற்பயிற்சி செய்யறவங்களுக்கு கூடுதல் நன்மை தரும்.
இந்த வயதில், எலும்பு ஆரோக்கியம் முக்கியம். முட்டையில் உள்ள வைட்டமின் D, எலும்புகளை வலுப்படுத்துது. B12, நரம்பு மண்டலத்துக்கு உதவுது.
ஒரு முட்டையில் சுமார் 70-80 கலோரிகள் மட்டுமே இருக்கு, இது எடை Management செய்பவர்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
ஆபத்துகள்:
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால், இதய நோய் ஆபத்தை உயர்த்தலாம்னு ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனா, சமீபத்திய ஆய்வுகள், முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால், ஆரோக்கியமானவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதுனு காட்டுது. இருந்தாலும், இதய நோய் அல்லது நீரிழிவு இருக்கறவங்களுக்கு, முட்டை எடுத்துக் கொள்வதை கவனிக்கணும்.
நார்மலாக இருப்பவர்கள் கூட, தினமும் 2-3 முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தலாம்.
முட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்குது. 30 வயதுக்கு மேல் இருக்கறவங்க, இந்த ஆலோசனைகளை பின்பற்றலாம்:
தினமும் 30-45 நிமிட உடற்பயிற்சி, இதய ஆரோக்கியத்தையும், மெட்டபாலிசத்தையும் மேம்படுத்துது.
உடல் எடையை கட்டுப்படுத்தறது, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுது.
புகைபிடிக்கறதை தவிர்க்கறது, மன அழுத்தத்தை குறைக்கறது, மற்றும் 7-8 மணி நேர தூக்கம், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.