
தூக்கம் என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு ஆரோக்கியமான பகுதி, தினமும் இரவில் தூக்கினால் தான் நமது உடல் தேவையான சில ஹார்மோன்கள் சுரக்கும். அவ்வாறு இரவில் தூக்கமின்மை உடலில் பல்வேறு நோயை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இரவில் தூங்கவில்லை என்றால் அந்த நாளே மெதுவாக நகர்வது போல போல இருக்கும். சிலர் உணவை கூட பொருட்படுத்தாமல் எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இதுபோல தூங்காமல் என்னால் இருக்க முடியாது என சொல்பவர்களா நீங்கள்? அப்போது உங்களுக்கு தான் இந்த போட்டி, பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் வாழ்க்கையில் தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்த ஒரு போட்டி நடத்தி வருகின்றனர். அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 60 நாட்கள் இரவில் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
இந்த போட்டியை அந்த நிறுவனம் கடந்த 2019 -ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 4 சீசன்களை நடத்தியுள்ளனர். அடுத்து ஐந்தாவது சீசனை விரைவில் நடத்தியுள்ளனர். கடந்த சீசனில் கலந்து கொண்ட புனேவை சேர்ந்த பூஜா என்ற பெண் ஒருவர் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒன்பது லட்சம் பரிசு தொகையை வெற்றி பெற்றுள்ளார்.
போட்டியின் விதிமுறைகள்:
தொடர்ந்து 60 நாட்கள் இரவு 9 மணி நேரம் தூங்கவேண்டும்.
இடையில் கண் விழிக்காமல் தொடர்ந்து உறங்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்கள் முழுமையாக நிரப்பப்பட விட்டால் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் பொய் எனில் போட்டியில் இருந்து விலக்கப்படுவீர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.