சிக்கன் பிரியாணி ரகசியம்: மாஸ்டர் சொல்லும் 3 சிம்பிள் டிப்ஸ்!

அரிசியை எடுத்து பல்லுல கடிச்சுப் பார்த்தா, நடுவுல லேசா 'கடி' படணும்....
biriyani
biriyani
Published on
Updated on
2 min read

ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்ய சமையல் மாஸ்டர்கள் ஃபாலோ பண்ற ரொம்ப சிம்பிளான மூணு விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டா போதும்.

1. முதல் ட்ரிக்: கறியை ராத்திரி முழுக்க ஊற வச்சிருங்க!

பிரியாணியோட சுவை முழுக்க கோழி கறியில் இறங்கணும்னா, ஊற வைக்கிற நேரம் (Marination) ரொம்ப முக்கியம். சும்மா அரை மணி நேரம் எல்லாம் போதாது.

கோழிக் கறியை (எலும்போட இருக்கிற கறி இன்னும் நல்லா இருக்கும்) எடுத்து, அதுல புளிப்பு இல்லாத தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மசாலா பொடிகள், கொஞ்சம் எண்ணெய், அப்புறம் எலுமிச்சை சாறு இதையெல்லாம் போட்டு நல்லா கலக்கணும். இது கூடவே, கொஞ்சம் புதினா, கொத்தமல்லி இலைகளைப் பிசைஞ்சு போடுங்க.

இந்த மசாலா கலவையை, கறியோட நல்லா கலந்துட்டு, குறைஞ்சது 8 மணி நேரம், இல்லன்னா முதல் நாள் ராத்திரி முழுக்க ஃப்ரிட்ஜில் வச்சிருங்க. இந்த மாதிரி ரொம்ப நேரம் ஊற வச்சாதான், தயிரில் உள்ள புளிப்பு கறியை நல்லா மென்மையாக்கும். அப்போதான் பிரியாணி சமைக்கும்போது, கோழிக் கறி எலும்பை விட்டு தானா விலகி வரும்!

இரண்டாவது ட்ரிக்: அரிசியை 75% மட்டும் வேக வைங்க!

பிரியாணி ஒட்டாம, உதிரி உதிரியா வரதுக்கு காரணம், அரிசியை சமைக்கிற பதம் தான். நல்ல நீளமான பாஸ்மதி அரிசியை எடுத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கணும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணியை கொதிக்க வச்சு, அதுல உப்பு, பிரியாணிக்கு போடுற பட்டை, கிராம்பு எல்லாம் போட்டுட்டு, ஊற வச்ச அரிசியை போடுங்க. அரிசி முழுசா வேகக் கூடாது. ஒரு 75% மட்டும் வெந்தா போதும். அதாவது, அரிசியை எடுத்து பல்லுல கடிச்சுப் பார்த்தா, நடுவுல லேசா 'கடி' படணும். இந்த பதத்துல இருக்கும்போதே, உடனே தண்ணியை சுத்தமா வடிச்சிடணும்.

அரிசி முழுசா வெந்தா, அப்புறம் 'தம்' போடும்போது களி மாதிரி ஆயிடும். இப்படி 75% வெந்த அரிசியைத்தான், கறியோட ஆவி மீதி 25% வேக வச்சு உதிரியா ஆக்கும்.

மூன்றாவது ட்ரிக்: மூடி போட்டு 'தம்' போடுறது தான் சூப்பர்!

பிரியாணியோட மணம், சுவை எல்லாம் அதிகமா வரதுக்கு, கடைசியா செய்ற 'தம்' முறை ரொம்ப அவசியம்.

கறியும் மசாலாவும் ரெடியானதும், கனமா இருக்குற ஒரு பாத்திரத்தை எடுத்து, அதுல கறியை அடியில பரப்பி, அதுக்கு மேல பாதி வெந்த அரிசியை அடுக்கணும். அதுக்கு மேல, கலர் கலந்த பால் (இல்லன்னா நெய்), வறுத்த வெங்காயம், புதினா இதையெல்லாம் தூவி விடுங்க.

இப்போ பாத்திரத்தை நல்லா இறுக்கமா மூடிட்டு, அதுல இருந்து காத்து வெளிய போகாத மாதிரி (வேணும்னா மாவு பிசைஞ்சு மூடியைச் சுத்தி ஒட்டிடலாம்) சீல் பண்ணணும். மூடி மேல வெயிட்டா ஒரு பொருளை வைக்கணும். அடுப்பை ரொம்ப ரொம்ப கம்மி தீயில் வச்சு, 20 நிமிஷம் அப்படியே விடணும். இந்த சூட்டுல கறியோட வாசனையும், ஆவியும் அரிசிக்குள்ள இறங்கி, பிரியாணி அட்டகாசமான மனத்தோட ரெடி ஆகும். தம் முடிஞ்சதும் உடனே கிளறாம, ஒரு 10 நிமிஷம் கழிச்சு கிளறினா, பிரியாணி இன்னும் சுவையா இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com