50 வயதுக்குள்ளேயே பெருகும் பெருங்குடல் புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கா!? உடனே கவனியுங்க

உலக அளவில ஒவ்வொரு வருஷமும் 13 லட்சம் புது கேஸ்கள் பதிவாகுது, இதுல 6,93,000 பேர் இறப்புக்கு ஆளாகுறாங்க
50 வயதுக்குள்ளேயே பெருகும் பெருங்குடல் புற்றுநோய்! இந்த அறிகுறிகள் இருக்கா!? உடனே கவனியுங்க
Published on
Updated on
3 min read

பெருங்குடல் புற்றுநோய் (Colorectal Cancer - CRC) உலக அளவில மூணாவது இடத்துல இருக்குற பொதுவான புற்றுநோய். இது பொதுவா 50 வயதுக்கு மேல உள்ளவங்களுக்கு வர்றதுனு சொல்லப்பட்டாலும், கடந்த சில வருஷங்களா 20, 30 வயசு இளைஞர்கள் கூட இந்த நோயோட தாக்குதலுக்கு ஆளாகுறாங்க.

பெருங்குடல் புற்றுநோய், பெருங்குடல் (Colon) அல்லது மலக்குடல் (Rectum) பகுதிகளில் செல்கள் அசாதாரணமா வளர்ந்து, கட்டிகளை (Tumors) உருவாக்குற நோய். இந்த கட்டிகள் முதல்ல பாலிப்ஸ் (Polyps)னு சொல்லப்படுற அசாதாரண வளர்ச்சியா ஆரம்பிக்குது. இவை பல வருஷங்களுக்கு பிறகு புற்றுநோயாக மாறலாம். உலக அளவில ஒவ்வொரு வருஷமும் 13 லட்சம் புது கேஸ்கள் பதிவாகுது, இதுல 6,93,000 பேர் இறப்புக்கு ஆளாகுறாங்க. இந்தியாவுல இது ஆறாவது இடத்துல இருக்குற பொதுவான புற்றுநோய், ஆனா இளைஞர்களுக்கு இது அதிகரிச்சு வர்றது ஒரு கவலைக்குரிய விஷயம்.

கடந்த 20 வருஷங்களா, 50 வயதுக்கு கீழே உள்ளவங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் விகிதம் இரண்டு மடங்கு அதிகரிச்சிருக்கு, குறிப்பா 20-40 வயசு உள்ளவங்களுக்கு. இதுக்கு முக்கிய காரணங்கள்:

உணவுப் பழக்கம்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed Foods), சிவப்பு இறைச்சி (Red Meat), துரித உணவுகள் (Fast Food) அதிகமா சாப்பிடுறது, நார்ச்சத்து (Fiber) குறைவான உணவு எடுத்துக்குறது இதுக்கு முக்கிய காரணம். இந்தியாவுல, மேற்கத்திய உணவு முறை பரவி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் குறைஞ்சு வருது.

அதுபோல் உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, உடற்பயிற்சி இல்லாம இருக்குறது இந்த நோயோட ஆபத்தை அதிகரிக்குது. WHO சொல்லுறபடி, வாரத்துக்கு 150 நிமிஷம் மிதமான உடற்பயிற்சி இதை தடுக்க உதவும்.

ஆரோக்கியமற்ற பழக்கங்கள்:

புகைப்பழக்கம்: புகைப்பது, பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை 18-30% அதிகரிக்குது. புகையில இருக்குற கார்சினோஜன்கள் (Carcinogens), செல் வளர்ச்சியை பாதிச்சு, கட்டிகளை உருவாக்குது.

மது அருந்துதல்: ஆல்கஹால், குடலில் அழற்சியை உருவாக்கி, DNA-வை பாதிச்சு, புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்குது. 542,778 பேரை ஆராய்ந்த ஒரு ஆய்வு, ஆல்கஹால் உட்கொள்ளல் இதுக்கு முக்கிய காரணம்னு சொல்லுது.

பாக்கு, புகையிலை: இந்தியாவுல பாக்கு, புகையிலை மெல்லுற பழக்கம், குறிப்பா இளைஞர்களுக்கு, இந்த நோயோட ஆபத்தை உயர்த்துது.

என்வைரன்மென்டல் மற்றும் மைக்ரோபயோம் மாற்றங்கள்:

பாக்டீரியல் டாக்ஸின்: சில வகை E. coli பாக்டீரியாக்கள், குறிப்பா குழந்தைப் பருவத்துல colibactin டாக்ஸினுக்கு ஆளாகுறது, DNA-ல மாற்றங்களை ஏற்படுத்தி, இளம் வயசுல புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்குது. இது 981 புற்றுநோய் ஜீனோம்களை ஆராய்ந்த ஆய்வுல கண்டுபிடிக்கப்பட்டு, 40 வயதுக்கு கீழே உள்ளவங்களுக்கு 3.3 மடங்கு அதிகமா இருக்குனு சொல்லுது.

குடல் மைக்ரோபயோம்: ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மன அழுத்தம் ஆகியவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதிச்சு, புற்றுநோய் ஆபத்தை உயர்த்துது.

உடல் பருமன் மற்றும் நீரிழிவு:

உடல் பருமன் (Obesity) பெருங்குடல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய ஆபத்து காரணி. இந்தியாவுல இளைஞர்களுக்கு உடல் பருமன் அதிகரிச்சு வருது, இது இன்சுலின் எதிர்ப்பு, அழற்சியை உருவாக்கி, புற்றுநோய் செல்கள் வளர உதவுது.

நீரிழிவு நோய், குறிப்பா டைப்-2, இந்த நோயோட ஆபத்தை உயர்த்துது.

இளைஞர்கள் பொதுவா புற்றுநோயை சந்தேகப்படுறது இல்லை. மலத்தில் ரத்தம், வயிற்று வலி, எடை இழப்பு மாதிரியான அறிகுறிகளை ஹேமராய்ட்ஸ் (மூலம்) அல்லது வேறு சின்ன பிரச்சனைகள்னு நினைச்சு விடுறாங்க. இதனால, 50 வயதுக்கு கீழே உள்ளவங்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் மூணு அல்லது நாலாவது நிலையில் கண்டறியப்படுது, இது சிகிச்சையை கடினமாக்குது.

அறிகுறிகள்: எதை கவனிக்கணும்?

பெருங்குடல் புற்றுநோயோட ஆரம்ப அறிகுறிகள் சின்னதா இருக்கலாம், ஆனா இவற்றை புறக்கணிக்கக் கூடாது:

மலத்தில் ரத்தம் அல்லது கருப்பு நிற மலம்

நான்கு வாரங்களுக்கு மேல நீடிக்குற குடல் பழக்க மாற்றங்கள் (மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு)

வயிற்று வலி, அசௌகரியம், அல்லது பிடிப்பு

எடை இழப்பு

சோர்வு, இரத்த சோகை (Anemia)

மலம் கழிக்கும்போது முழுமையாக வெளியேறாகாத உணர்வு

இந்த அறிகுறிகள் இருந்தா, உடனே மருத்துவரை அணுகி, கோலோனோஸ்கோபி (Colonoscopy) மாதிரியான பரிசோதனைகளை செய்யணும்.

இந்தியாவுல பெருங்குடல் புற்றுநோய் மேற்கத்திய நாடுகளை விட குறைவு, இது பாரம்பரிய இந்திய உணவு முறையால (பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவு) இருக்கலாம். ஆனா, நகர்ப்புறங்களில் மேற்கத்திய உணவு முறை, உடல் உழைப்பு குறைவு ஆகியவை இதோட விகிதத்தை உயர்த்துது. 12 இந்திய புற்றுநோய் பதிவேடுகளை (பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, போபால், அகமதாபாத், பல்) ஆராய்ந்ததுல, CRC இந்தியாவுல ஆறாவது இடத்துல இருக்கு, ஆனா இளைஞர்களுக்கு இது மெல்ல உயருது.

மும்பையில உள்ள டாட்டா மெமோரியல் மருத்துவமனையில 1941-1972 வரை 555 கேஸ்கள் மட்டுமே பதிவாகி இருந்தது, ஆனா 2006-ல ஒரு வருஷத்துல 560 கேஸ்கள் சிகிச்சை பெற்றது. இது மாறி வர்ற உணவு முறையை சுட்டிக்காட்டுது.

தடுப்பு முறைகள்

ஆரோக்கியமான உணவு:

நார்ச்சத்து உணவு: தினமும் 5-6 பரிமாணங்கள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் (Whole Grains) சாப்பிடுதல். இது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்குது.

யோகர்ட்: Bifidobacterium பாக்டீரியா உள்ள யோகர்ட், குறிப்பா பெருங்குடலோட வலது பகுதியில் (Proximal Colon) புற்றுநோய் ஆபத்தை குறைக்குது. 132,000 பேர் உட்படுத்தப்பட்ட ஆய்வு இதை உறுதி பண்ணுது.

பால் மற்றும் கால்சியம்: 200 கிராம் பால் தினமும் குடிக்குறது, 40% புற்றுநோய் ஆபத்தை குறைக்குது.

சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு குறைப்பு: பேகன், சாஸேஜ், ஹாம் மாதிரியான உணவுகளை தவிர்க்கணும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

உடற்பயிற்சி: வாரத்துக்கு 150 நிமிஷம் ஜாக்கிங், நீச்சல், யோகா மாதிரியான மிதமான உடற்பயிற்சி உடல் பருமனையும், புற்றுநோய் ஆபத்தையும் குறைக்குது.

புகைப்பழக்கம், ஆல்கஹால் தவிர்ப்பு: புகைப்பதை நிறுத்தினா, DNA பாதிப்பு மற்றும் அழற்சி குறையும். ஆல்கஹால் குடிக்காம இருக்குறது குடல் ஆரோக்கியத்துக்கு உதவுது.

எடை கட்டுப்பாடு: உடல் எடைய கட்டுப்படுத்துறது, குறிப்பா உடல் பருமன் உள்ளவங்க, இதுக்கு முக்கியம். 1.1 பவுண்டு எடை குறைப்பு, பாலிப்ஸ் ஆபத்தை 46% கம்மி ஆக்குது.

மருத்துவ பரிசோதனைகள்:

கோலோனோஸ்கோபி: 50 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு ஒவ்வொரு 10 வருஷமும், குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு இருந்தா 40 வயசுலயே தொடங்கணும். இது பாலிப்ஸை ஆரம்பத்துலயே கண்டறிந்து அகற்ற உதவுது.

மல பரிசோதனை: Immunochemical Faecal Occult Blood Test (iFOBT) மூலம் மலத்தில் ரத்தம் இருக்கா-னு பரிசோதிக்கலாம்.

ஜெனடிக் ஸ்க்ரீனிங்: குடும்பத்தில் Lynch Syndrome அல்லது Familial Adenomatous Polyposis (FAP) இருந்தா, மரபணு பரிசோதனை செய்யணும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com