
“உணவே மருந்து” என்று திருவள்ளுவர் சொல்லும் கருத்தை பொய் ஆக்கும் விதமாக தான் இன்றைய காலம் நகர்த்துக்கொண்டிருக்கிறது. கறந்த பால் போல தூய்மை என்பார்கள் இன்று அந்த பாலே தூய்மை இல்லாமல் இருக்கிறது.
ஆரோக்கியமான கலப்படமில்லாது உணவுகள், கிடைப்பதே இன்று அரிதாக தான் உள்ளது.எல்லாவற்றிலும் கலப்படம் செய்தால், கலப்படம் இல்லாத உணவை எப்படி தெரிந்து கொள்வது என்று நீங்கள் யோசிப்பது எங்களுக்கு புரிகிறது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவு பொருட்களில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறிவது என இங்கு காண்போம்.
பால் மற்றும் பால் பொருட்கள்
பாலில் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச், அல்லது செயற்கை பால் தூள் போன்றவரை சேர்த்து கலப்படம் செய்கின்றனர்.
ஒரு துளி பாலை சாய்ந்த மேற்பரப்பில் விடவும். தண்ணீர் கலந்திருந்தால், பால் வேகமாக வழிந்து செல்லும். தூய பால் மெதுவாகவும், வெள்ளைப் பாதையை விட்டுச் செல்லும்.
ஒரு ஸ்பூன் பாலில் சிறிது அயோடின் கரைசல் சேர்க்கவும். நீல நிறம் தோன்றினால், ஸ்டார்ச் கலந்திருக்கிறது.பாலை சோயாபீன் தூளுடன் கலந்து, பின்னர் லிட்மஸ் காகிதத்தில் சோதிக்கவும். நீல நிறமாக மாறினால், யூரியா உள்ளது.
தேன்
சர்க்கரை கரைசல், குளுக்கோஸ், அல்லது செயற்கை இனிப்புகளை கலந்து தேனில் கலப்படம் செய்கின்றனர்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனை விடவும். தூய தேன் கரையாமல் அப்படியே கீழே செல்லும். கலப்பட தேன் உடனடியாக கரையும்.
ஒரு பஞ்சு துணியில் தேனை தடவி, அதனை எரிக்க முயலவும். தூய தேன் எரியும், ஆனால் கலப்பட தேன் ஈரமாக இருக்கும்.
ஒரு தேக்கரண்டி தேனை எடுத்து அதனுடன் சிறிது நீரும் அல்லது 3 துளி வினிகரும் சேர்த்து கலக்கும் பொது நுரை வந்தால் அது கலப்படம் என அறியவும்.
மசாலாப் பொருட்கள்
மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் போன்றவற்றில் செங்கல் தூள், மரத்தூள், செயற்கை வண்ணங்கள் கலந்து கலப்படம் செய்கின்றனர்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகாய் தூளை கலக்கவும். செங்கல் தூள் இருந்தால், அது கீழே படியும். செயற்கை வண்ணம் இருந்தால், தண்ணீர் சிவப்பு நிறமாக மாறும்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் (HCl) கலக்கவும். இளஞ்சிவப்பு நிறம் தோன்றினால், செயற்கை வண்ணம் உள்ளது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் கொத்தமல்லி தூளை கலக்கவும். மரத்தூள் இருந்தால், அது மேற்பரப்பில் மிதக்கும்.
எண்ணெய் மற்றும் நெய்
எண்ணெய் மற்றும் நெய்யில் மலிவான எண்ணெய்கள், பாமாயில், அல்லது செயற்கை சுவையூட்டிகள்போன்றவரை கலந்து கலப்படம் செய்கின்றனர்.
ஒரு டீஸ்பூன் நெய்யை உருக்கி, அதில் ஒரு சிட்டிகை அயோடின் உப்பு சேர்க்கவும். நீல நிறம் தோன்றினால், உருளைக்கிழங்கு ப்யூரி கலந்திருக்கிறது.
எண்ணெயை ஒரு கண்ணாடி குடுவையில் வைத்து, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தூய எண்ணெய் தெளிவாக இருக்கும், ஆனால் கலப்பட எண்ணெய் மங்கலாகவோ அல்லது படிவாகவோ தோன்றும்.
அரிசி மற்றும் பருப்பு
ஒரு கைப்பிடி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும். கற்கள் இருந்தால், அவை கீழே படியும். செயற்கை பாலிஷ் இருந்தால், தண்ணீர் எண்ணெய் பசையுடன் இருக்கும்.
பருப்பை உற்று பார்க்கவும். செயற்கை வண்ணம் இருந்தால், அவை அசாதாரணமாக பளபளப்பாக இருக்கும். ஒரு சிறிய அளவு பருப்பை தண்ணீரில் கழுவினால், வண்ணம் கரையும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஆப்பிள் அல்லது திராட்சை போன்றவற்றை வெந்நீரில் கழுவவும். மெழுகு இருந்தால், அது உருகி மேற்பரப்பில் மிதக்கும்.
பச்சை காய்கறிகளை வெந்நீரில் போட்டு, பின்னர் ஒரு பருத்தி துணியால் தேய்க்கவும். வண்ணம் துணியில் ஒட்டினால், செயற்கை வண்ணம் உள்ளது.
பழங்களை வெட்டி, உள் பகுதியை ஆராயவும். கார்பைடு பயன்படுத்தப்பட்டிருந்தால், பழத்தின் உட்பகுதி முழுமையாக பழுக்காமல் இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்