
மனித பரிணாமத்தில் ‘பாலியல்’ சார்ந்த கேள்விகஅதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் பொதுப்புத்தியில் ஒரு தட்டையான மன நிலை உண்டு அதுதான், ஆண், பெண் இருவருக்கு இடையே நிகழும் உடலுறவு மட்டும் தான், முறையான ‘sexuality’ என்பதுதான் அது. ஆனால் நடைமுறையில் அது வேறாக உள்ளது.
ஒரு நல்ல காதல் வாழ்வின் முக்கியமான விஷயம் காமம். ஆனால் பல சமயங்களில் இது வெறும் ஆணின் இன்பம் மற்றும் உடல் ரீதியான ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் கலவி உணர்வும் உடலும் ஒன்று சேரும் இடமாகும். மேலும் பல நேரங்களில் உடலுறவின்போதுதான் மனிதர்கள் அதீத அளவிலான காதல் உணர்வை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் வாழும் சூழல், அனுபவங்கள், இச்சைகளை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், ஈஸ்ட்ரோஜன் டெஸ்டிஸ்ட்ரோன் உள்ளிட்ட ஹார்மோன்களின் மாறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் பாலின தேர்வு நிச்சயம் மாறுபடும்.
நீங்கள் எந்த மாதிரியான பால் ஈர்ப்பு ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளுவது மிக மிக அவசியம். எந்த பால் ஈர்ப்பு வேண்டுமானாலும் நமக்கு உருவாகலாம், அது இயற்கை, மிக இயல்பான ஒன்று. ஆனால் சமூகம் நம்மை நமது விருப்பத்திற்கு ஏற்ற பால் ஈர்ப்பை ஏற்க அனுமதிப்பது இல்லை. ஆனாலும், ஓவ்வொரு மனிதனுக்கும் தனது அந்தரங்க வாழ்க்கையை தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அதற்கு முன்பு நீங்கள் எந்த பால் ஈர்ப்புகொண்டவர் என்பதை அறிய முற்பட வேண்டும். அது நமது பால் சார்ந்த அடையாளம் ஆகும்.
உலகி பல வகையான பால் ஈர்ப்பு வகைமைகள் உள்ளன.
Bisexual - பை செக்ஸுவல் என்றல், ஆண் பெண்என இரு பாலினத்தவரின் மீதும் ஈர்ப்பு உண்டாகும். பை செக்ஸுவல் -ஆக இருக்கும்போது உளவியல் சிக்கல்கள் கையாள கடினமாக இருக்கலாம்.
Androsexual என்பது ஆண், அல்லது ஆண் தன்மை (masculinity) மீது உண்டாகும் பாலியல் ஈர்ப்பு. இது, மரபணு அல்லது ஹார்மோன் -ஆல் ஏற்படலாம், அல்லது சமூக கட்டமைப்பு மற்றும் வெளி காரணிகளால் ஏற்படலாம்.
Asexual என்பது பாலியல் ஈர்ப்பை உணராமல், அல்லது அதிகளவு ஈர்க்கப்படாமல் இருப்பார்கள். இந்த மாறிய sexuality -கொண்டவர்களுக்கு காதல் ஏற்படும். ஆனால் காம உணர்வு வழக்கத்தை விட குறைவாக இருக்கும்.
Autosexual - தன் மீதே பால் ஈர்ப்பு கொண்டவர்கள். ஆம் இந்த வகைமையை சேர்ந்தவர்களுக்கு பிற மனிதர்கள் மீது ஈர்ப்பு ஏற்படாது. இவர்கள் ‘சுய இன்பம்’ மூலம் தங்கள் கலவி நடைமுறைகளில் ஈடுபடுவார்கள்.
Demisexual - இந்த வகைமையை சேர்ந்தவர்களுக்கு யார் மீதேனும், காதல் உணர்வு வந்தால்தான் பால் ஈர்ப்பு ஏற்படும். அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ரொமான்ஸ் வந்தால் மட்டுமே இந்த வகைமை காரர்களுக்கு பால் ஈர்ப்பு ஏற்படும்.
Fluid - இந்த வகைமையை சேர்ந்தவர்களுக்கு, பாலின ஈர்ப்பு, நாளுக்கு நாள் வாழ்வியலுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு நிலையான பால் ஈர்ப்பு இருக்காது.
இன்னும் கண்டறியப்படாத, வகைப்படுத்தப்படாத பல வகையான பால் வகைமைகள் உள்ளன. எனவே நாம் நமது பால் வகைமையை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். அப்போதுதான் உளவியல் சிக்கல்களை சமாளிக்க முடியும்.
மனிதர்கள் சமயங்களில் தாங்கள் காதலிக்கும் மனிதருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை மரித்துவிடுவார்கள், பல நேரங்களில் பல விஷயங்களில் வாய் மூடி மௌவுனியாக இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் அது பெரும் பிரச்சனையாக மாறலாம் , ஆகவே இதுகுறித்து கவனமாக இருப்பது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.