

உடலுக்குக் குளுமை தரும் காய்கறிகளில் பீட்ரூட் ரொம்பவே முக்கியமானது. அதன் அடர் சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே, அது இரத்தத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று தெரியும். பீட்ரூட்டை வெறும் அரை கப் அளவு தினமும் சாப்பிட்டாலே போதும், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கும். அதனால் தான் இதை 'இதய டாக்டர்' என்றே செல்லமாக அழைக்கிறார்கள். பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது நம்முடைய ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் சீராக இருந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு வெகுவாகக் குறையும். அதனால், தினமும் அரை கப் பீட்ரூட்டை சாலட் ஆகவோ அல்லது சாறாகவோ குடித்து வந்தால், மாரடைப்பு பயமே வேண்டாம்.
பீட்ரூட்டின் சிவப்பு நிறத்துக்குக் காரணம், அதில் இருக்கும் பீட்டா சயனின் என்ற சத்துதான். இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட். இது நம்முடைய உடலில் உள்ள கல்லீரலை சுத்தப்படுத்த ரொம்பவே உதவியாக இருக்கிறது. கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, கல்லீரல் சரியாக இயங்க இது உதவுகிறது. மேலும், இது புற்றுநோய் செல்கள் உருவாவதையும், வளர்வதையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் போன்றவை வராமல் இருக்க பீட்ரூட் உதவுகிறது.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து ரொம்பவே அதிக அளவில் இருக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், அதாவது இரத்தசோகை இருப்பவர்கள், பீட்ரூட்டை ஜூஸ் ஆகவோ அல்லது பொரியலாகவோ சாப்பிட்டால், ஒரு சில நாட்களிலேயே ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இது நம்முடைய உடலில் புதிய இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக ரொம்பவே முக்கியம். இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் போதுமான ஆக்சிஜன் கிடைக்க இது உதவுகிறது.
இந்தக் காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து, மலச்சிக்கல் பிரச்சினையைத் தடுக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்து நம்முடைய உடலின் தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி, வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலில் கொழுப்பு சேருவது குறைந்து, உடல் எடை சீராக இருக்கும். உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பீட்ரூட்டை ஜூஸ் ஆகக் குடிக்கலாம். இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.
மேலும், பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ரொம்பவே உதவுகிறது. இது மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அல்சைமர் போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்கவும் பீட்ரூட் உதவுகிறது. அதனால், இதயத்துக்கு நல்லது செய்யும் இந்த பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.