புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் பழம்!

இந்தப் பழம் உங்கள் உணவில் தினமும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
eat pomegranate in tamil
eat pomegranate in tamil
Published on
Updated on
2 min read

மாதுளைப் பழம்.. பல ஆரோக்கிய ரகசியங்களை தனக்குள் வைத்திருக்கும் ஒரு 'ஆரோக்கியப் பெட்டகம்'. இந்தச் சிகப்பு முத்துக்களில் இருக்கும் சத்துக்கள், சில கொடிய நோய்களை நம்மை நெருங்க விடாமல் தடுக்க உதவுகிறது. அதிலும், புற்றுநோய் போன்ற மிகப் பெரிய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதன் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் தான், இந்தப் பழம் உங்கள் உணவில் தினமும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மாதுளைப் பழத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான நன்மை, அது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதுதான். மாதுளையில் போமேகிரானின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இந்தச் சத்து, புற்றுநோய் செல்கள் உருவாவதையும், வளர்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வராமல் இருக்க மாதுளை உதவுகிறது. புற்றுநோய் செல்கள் உடலில் சேதமடையாமல் இருக்க இந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் உதவி செய்கின்றன. அதனால், தினமும் ஒரு மாதுளைப் பழத்தை ஜூஸ் ஆகவோ அல்லது பழமாகவோ சாப்பிட்டால், புற்றுநோய் பயம் இல்லாமல் வாழலாம்.

இரண்டாவது மிக முக்கியமான நன்மை என்னவென்றால், இது நம்முடைய இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை (எல்டிஎல் கொழுப்பு) ஒரே நாளில் குறைக்க உதவுகிறது. மாதுளைச் சாறு குடிக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. இது இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகளைக் கரைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, உடல் எடை சீராக இருக்கவும் உதவுகிறது. கொழுப்பு பிரச்சினை இருப்பவர்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால், ஒரு சில நாட்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மேலும், இது நம்முடைய இதய ஆரோக்கியத்துக்கு ரொம்பவே நல்லது. கொழுப்பு குறைவதால், இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மாதுளைச் சாறு, இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவும். இரத்த அழுத்தம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். அதனால், மாதுளைப் பழம் ஒரு சிறந்த இதய மருத்துவர் போலச் செயல்படுகிறது. நான்காவது நன்மை என்னவென்றால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. மாதுளையில் சர்க்கரை இருந்தாலும், அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாவதைத் தடுக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கால் வலி, நரம்புப் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

மாதுளையில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய சருமத்தை இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தாமதப்படுத்துகின்றன. மாதுளைச் சாறு குடித்தால், சருமம் பளபளப்பாக இருக்கும். மாதுளைப் பழத்தின் இந்த அற்புதமான நன்மைகளைப் பெற்று, நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள். இந்த 'ஆரோக்கியப் பெட்டகத்தை' தினமும் உங்கள் உணவில் சேர்த்து, நோய்களை விரட்டுங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com