

அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் தற்போதைய காற்று மாசுபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையைச் சந்திக்கின்றனர்.
சந்தையில் கிடைக்கும் ரசாயன ஷாம்புகளை விட, வீட்டில் தயாரிக்கும் இயற்கை எண்ணெய்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுவதில் சிறந்தது. தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டித் தலையில் தேய்த்து வந்தால், வேர்க்கால்கள் பலமடைந்து முடி உதிர்வு உடனடிய நிறுத்தப்படும்.
சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்து முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை அரைத்துத் தலைக்குக் குளிப்பது இயற்கையான கண்டிஷனராகச் செயல்படும்.
புரதச்சத்து நிறைந்த முட்டையின் வெள்ளைக்கருவை வாரம் ஒருமுறை ஹேர் பேக் போலப் பயன்படுத்துவது முடிக்கு நல்ல மென்மையையும் மின்னலையும் தரும். உணவில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் (Biotin) நிறைந்த கீரைகள், பாதாம் மற்றும் மீன் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது உள்ளிருந்து கூந்தலை வளர்க்க உதவும்.
தலைமுடிக்குச் சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் அலசுவது நல்லது. தலைக்குக் குளித்தவுடன் ஈரமான முடியைச் சீப்பால் வாரக் கூடாது, இது முடி உடைவதற்கு வழிவகுக்கும். போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும் முடி ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலின் சூட்டைக் குறைத்து முடி உதிர்வைத் தடுக்கும். இயற்கை வழங்கியுள்ள இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், நீங்களும் அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.