
நமது உடல் என்பதே , நமக்கு இந்த இயற்கை கொடுத்த வரம் தான்.ஆனால் அப்படி வரமாக கிடைத்த உடலை நாம் இன்று விஷமாக மாற்றி கொண்டு இருக்கிறோம், என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எல்லாம், மனிதர்களுக்கு மத்தியில் இந்த நேரத்தில் தான் இதை செய்யவேண்டும், என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தது. இதனால் மனித உடலும் ஆரோக்கியமாக இருந்தது .
இன்றைய காலகட்டத்தில், தொழில் நுட்ப வளர்ச்சியாலும், வேலைநிமித்தமாகவும், எதை எப்போது வேண்டுமென்றாலும் செய்யும் ,கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளோம், இதனால் என்ன பாதிப்பு இருக்கப்போகிறது என்று, அலட்சியமாக எண்ணாதீர்கள்.
கடிகாரம் என்பது எல்லார்க்கும் தெரியும், ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு, தெரியும் நமது உடலும் அதுபோல ஒரு சுழற்சியில் தான் , இயங்குகிறது என்று ? நமது உடலுக்கு என ஒரு உயிரியல் சுழற்சி உள்ளது. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் நமது உடலுக்கே ஆபத்து! முதலில் உயிரியல் சுழற்சியை பற்றி தெரிந்து கொள்வோம்.
உயிரியல் சுழற்சி:
உயிரியல் சுழற்சி என்பது, நமது உடல் நாம் செய்யும் செயல்களுக்கேற்ப இதை இந்த நேரத்தில் தான் செய்யவேண்டும் என ஒரு சுழற்சியில் இயங்கிக்கொண்டு இருக்கும் .
அதே போல, குறிப்பிட்ட ஹார்மோன்களை குறிப்பிட நேரத்தில் தான் சுரக்கும். தூக்கம், பசி, செரிமானம் போன்றவரை ஒரே சீரான முறையில் பாதுகாக்கும் .
பாதிப்பு:
உயிரியல் சுழற்சி கெடுவதினால், நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது, சின்ன சின்ன பாதிப்புகளில் தொடங்கி, பெரிய பாதிப்புகளுக்கு நமது உடல் உள்ளாகிறது .
உதாரணமாக, தலை சுற்றல் வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை ஏற்படலாம், என்கின்றனர் மருத்துவர்கள. மேலும் இதன் பாதிப்பு என்பது, மும்பது நாற்பது வருடங்களுக்கு மேல் தான் பெரிதாக தெரியும் என்கின்றனர்.
நேரத்திற்கு சாப்பிடாததினாலும், சரியான நேரங்களில் உறங்காததினாலும், உடலின் சமநிலையய் பின்பற்றாததினாலும், நமது உடலின் உயிரில் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது.
உயிரியல் சுழற்சியை எவ்வாறு பாதுகாப்பது:
தூக்கத்தை ஒழுங்குபடுத்துதல்:
ஒரே நேரத்தில் படுக்கவும், எழவும். உதாரணமாக, இரவு 10 மணிக்கு படுத்து காலை 6 மணிக்கு எழுதல்.
தூங்குவதற்கு முன் திரைகளை (மொபைல், டிவி) தவிர்க்கவும், ஏனெனில் நீல ஒளி தூக்க ஹார்மோனை (மெலடோனின்) பாதிக்கும். படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருக்கவும்.
இரவு தூங்காமல், பகலில் எவ்ளவு நேரம் தூக்கினாலும் இந்த மெலடோனின் என்ற, ஹார்மோன் சுரப்பது இல்லை, தொடர்ந்து இந்த ஹார்மோன், சுரக்காவிட்டால் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கிறதாம். எனவே இரவில் தூங்குவதே, சரியான தூக்கமா இருக்கும்.
உணவு மற்றும் செரிமான சுழற்சி:
ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை சீரான நேரத்தில் சாப்பிடவும் (உதா: காலை 8, மதியம் 1, இரவு 7).
அதிக நார்ச்சத்து உணவுகள் (காய்கறிகள், பழங்கள்) சாப்பிடுவதால் செரிமானம் சீராகும்.
துரித உணவுகளை, பெரும்பாலும் தவிர்ப்பது முறையான செரிமானத்திற்கு உதவுகிறது, பசிக்காத போது உணவு உட்டகொள்வதை, தவிர்ப்பதும் செரிமானத்தை சீர்படுத்தும்.
ஹார்மோன் சுழற்சியை சமநிலைப்படுத்துதல் :
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை சீராக்க, மன அழுத்தத்தை குறைக்கவும் (யோகா, தியானம் உதவும்).
தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்யவும் – இது ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும்.
நமது உடலுக்கு, அவர் அவர் உடல் எடைக்கு ஏற்றார் போல போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். நமது உடலில் ஹார்மோன்கள் சுரக்க நீர்சத்து பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தத்தை கையாளுதல்:
மன அழுத்தம் உயிரியல் சுழற்சியை பாதிக்கும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி (பிராணாயாமம்) செய்யவும்.
தினமும் 10-15 நிமிடங்கள் தியானம் செய்யவும்.
மனதை எப்போதும் அமைதியாக, வைத்திருப்பது உயிரியல் சுழற்சி, பதிப்பில்லாமால் இயங்க தூண்டும், அதிக மன அழுத்தத்தோடு, இருப்பது உடலில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்க வழிவகுக்கும்.
சூரிய ஒளியை பயன்படுத்துதல்:
சூரிய ஒளியினால் தான், நமது உடலில் தோலுக்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்கிறது, சூரிய ஒளி உடலில் படுவதால், ஒரு வித புத்துணர்ச்சி மனதிற்கு கிடைக்கும்.
காலையில் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடப்பது உடலின் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சரிசெய்யும்.
எனவே இனியாவது இதனை அறிந்து, உடலின் உயிரியல் சுழற்சியினை பாதுகாத்து, நலமுடன் வாழ்வோம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்