'இந்த சம்பளத்துக்கு இவ்ளோதான் வேலை' - சம்பளத்தில் அதிருப்தியடைந்த பெண் செய்த செயல்!

“நான் வேலையை விட்டுச் செல்ல மாட்டேன். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்ற கருத்தை அவருக்குப் புரிய வைப்பேன்" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சம்பளம் போதாமையால் அலுவலகத்தில் தூங்கிய பெண்
சம்பளம் போதாமையால் அலுவலகத்தில் தூங்கிய பெண்
Published on
Updated on
1 min read

மத்திய சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், பணி நேரத்தில் ஐந்து மணி நேரம் அலுவலகத்தில் உறங்கியதுடன், மீண்டும் அவ்வாறு செய்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக தனது மேலாளர் மிரட்டியதாகக் கண்ணீருடன் இணையத்தில் புகார் அளித்த சம்பவம், சீன சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் அடையாளத்தை வெளியிடாத அந்த செய்தியில், தனது முதலாளியால் மோசமாக நடத்தப்பட்டதாகவும், தனக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவு திருப்தியளிக்கவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார். அவர் ஹெனான் மாகாணத்தின், ஷாங்கியுவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அந்த அறிக்கையில், அவரை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தின் தகவலோ அல்லது அவரது பணி விவரமோ தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தன் முதலாளியின் பணிநீக்க மிரட்டலுக்கு அந்தப் பெண் சமூக வலைதளத்தில் வைரலான ஒரு பதிவில் பதிலளித்துள்ளார்: “நான் வேலையை விட்டுச் செல்ல மாட்டேன். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்ற கருத்தை அவருக்குப் புரிய வைப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பெண் அலுவலகத்தில் தூங்கியது மட்டுமின்றி, அவர் எழுந்ததும், தனது முதலாளியின் மேசையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துச் சாப்பிட்ட பிறகுதான், அவர் நீண்ட நேரம் தூங்கியிருந்ததையே முதலாளி கண்டுபிடித்துள்ளார். 'குளுக்கோபீனியா' நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது முதலாளி, அதன் விளைவாக, சரியான நேரத்தில் சர்க்கரை அளவை ஈடுசெய்ய முடியாததால் அலுவலகத்தில் மயங்கியே விழுந்துள்ளார். “என் முதலாளி கடுங்கோபமடைந்தார். நான் அவரைக் கொல்ல நினைத்ததாக அவர் கூறினார். வேலையை விட்டு நீக்கிவிடுவதாக மிரட்டி எனக்கு எச்சரிக்கை விடுத்தார்,” என்று அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். "என்னை விமர்சிப்பவர்களே, இவ்வளவு குறைந்த சம்பளம் வாங்கும் என்னைப் போன்றவர்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை," என்று அவர் மேலும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் கதை சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது, அங்கு பெரும்பாலான இணையப் பயனர்கள் அவருக்கு எதிராக வாதிட்டனர். "எந்த முதலாளியும் இதுபோன்ற ஒரு ஊழியரைச் சகித்துக்கொள்ள மாட்டார்," என்று ஒரு இணையப் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே செல்கிறது என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com