இதையெல்லாம் அவாய்ட் பண்ணலே போதும்! உங்க சேமிப்பு சேபா இருக்கும்.. நிதி ஆலோசகர்கள் கொடுக்கும் ஐடியா!

பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே இருக்கும். நமது நிதிகுறித்த திட்டத்தில் அவசர காலத்திற்கு..
savings plan
Published on
Updated on
2 min read

இன்றைய பரப்பான வாழ்க்கையில், தினமும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சம்பாதித்தாலும், அவர்களின் பணம் சேமிக்கப்படவோ அல்லது பெருக்கவோ இல்லை என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நாம் முதலீடு செய்யாமல் தவறியது.

மாதம் பிறந்தால் போதும் சம்பளம் வந்தால் போதும் என்ற மனநிலை, நம்மை நிதி முன்னேற்றத்திலிருந்து தடுக்கிறது. முதலீடு என்பது வசதியானவர்களுக்கு மட்டுமான விஷயம் அல்ல; அது நிதி சுதந்திரத்தை அடைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒரு பழக்கமாகும். தனிநபர் நிதி குறித்த மிகச் சிறந்த அறிவுரை என்னவென்றால், முதலில் உங்களுக்கே நீங்கள் பணம் செலுத்தி கொள்வது தான். இதை முன்னிலை படுத்துவது அவசியமான ஒன்று. உதாரணமாக உங்களுக்கு ஒரு  ஆயிரம் ரூபாய் கிடைத்தவுடன், அதை முத்துவதும் செலவழிப்பதற்கு முன், அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமித்து முதலீடு செய்ய முடிவு செய்வதே இதன் அரத்தமதமாகும்.  இந்த மனநிலையை கற்றுக்கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கும் புகட்ட வேண்டும். 

முதலீடு செய்யாமல் இருப்பவர்கள் பொதுவாக செய்யும் 5 பெரிய தவறுகளாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுவது.

அதற்கான ஆரம்பிப்பதில் தாமதிப்பது தான் முதல் தவறு. பலர் “இன்னும் நேரம் இருக்கிறது” என்று நினைத்து முதலீட்டை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் முதலீட்டில் நேரம் மிகவும் முக்கியமானது. குறைந்த தொகையிலேயே ஆரம்பித்தாலும், நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்தால், மூலம் பெரிய அளவில் செல்வம் உருவாக்க முடியும். தாமதம் செய்வது, இந்த வாய்ப்பை இழப்பதற்கு சமமாகும். இதற்கான எளிய வழிகளும் உள்ளது. உதாரணமாக மியூசுவல்  பண்ட் அல்லது SIP போன்ற முறைகளை பயன்படுத்தி முதலீடு செய்யலாம்.

சேமிப்பை மட்டும் நம்புவது, சேமிப்பு நல்ல பழக்கம் தான். ஆனால் சேமிப்பு மட்டும் போதுமானதல்ல. வங்கி கணக்கில்  பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பானது என்றாலும், அது அதிக வருமானத்தை தராது. மேலும், பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே இருக்கும். நமது நிதிகுறித்த திட்டத்தில் அவசர காலத்திற்கு என தனியாக பணத்தை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தன அது நமது எதிர்கால சேமிப்பையோ அல்லது முதலீட்டையோ பாதிக்காது. அதனால் திட்டமிடல் அவசியம். அதிலும் பட்டியலிடுதல் நல்லது.

முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படும் என்ற பயம் பலரிடம் உள்ளது. இந்த பயம் காரணமாகவே அவர்கள் முதலீட்டை முற்றிலும் தவிர்க்கிறார்கள். ஆனால் உண்மையில், எந்த முதலீட்டிலும் ஒரு அளவு ரிஸ்க் இருக்கும். அதே சமயம், சரியான திட்டமிடல் மற்றும் நீண்டகால அணுகுமுறையால் அதை நம்மால் கையாள முடியும். இதில் இருந்து தப்பிப்பதாக்க நினைத்து அதை முற்றிலும் தவிர்ப்பது, உங்கள் நிதி வளர்ச்சியைத் தவிர்ப்பதற்கு சமம்.

நிதி அறிவை புறக்கணிப்பது. முதலீடு குறித்து தெரிந்துகொள்ள முயற்சி செய்யாததும் ஒரு பெரிய தவறு தான். இன்றைய டிஜிட்டல் உலகத்தில், முதலீடு பற்றிய அடிப்படை அறிவை பெறுவது மிகவும் எளிதானது அதே போல் அவசியமானது. நமக்கு என் இத்தலம் நினைப்பது நம்மை மட்டும் நம் எதிர்கால திட்டத்தையும் மழுங்கடிக்கும் செயலாகும். இந்த பரபரப்பான வைகை சூழலில் நாம் பணத்தை கையாள்வது அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யவதோ தவிர்க்க முடியாத ஒன்று. அதை பற்றிய அறிவும் தவிர்க்க முடியாத ஒன்றே ஆகும். தற்போது பல்வேறு ஆன்லைன் தளங்கள், வீடியோக்கள், மற்றும் கட்டுரைகள் மூலம் நாம் நிதி அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். நிதி சார்ந்த அறிவு இல்லாததால் பலர் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் அல்லது முதலீட்டை தொடங்கவே தயங்குகிறார்கள்.

தெளிவான இலக்கு இல்லாமல் இருப்பது தவிர்க்க வேண்டிய தவறு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலீடு செய்யும் போது ஒரு தெளிவான இலக்கு இருக்க வேண்டும். வீடு வாங்குதல், குழந்தைகளின் கல்வி, ஓய்வூதியம் போன்ற நிதி இலக்குகள் இருந்தால், முதலீட்டை சரியான முறையில் திட்டமிட முடியும். இலக்கு இல்லாத முதலீடு, திசை இல்லாத பயணத்தைப் போன்றது.

முதலீடு என்பது ஒரு விருப்பம் அல்ல, ஒரு அவசியம் என்பதை நாம் உறுதிபட நம்ப வேண்டும். சிறிய தொகையிலேயே தொடங்கினாலும், தொடர்ந்து முதலீடு செய்வது உங்கள் நிதி நிலையை மாற்றும் முக்கியமான கருவியாகும். இன்று நீங்கள் எடுக்கும் முக்கியமான நிதி சார்ந்த முடிவுகள், உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றும் என்பதை புரிந்துகொண்டால் போதும். நீங்களே முடிவெடுப்பீர்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com