
இந்தியாவில் நெடுஞ்சாலை பயணங்களை எளிதாக்கவும், செலவைக் குறைக்கவும், நேஷனல் ஹைவேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கு. FASTag வருடாந்திர பாஸ், 3,000 ரூபாயில் 200 டோல்-ஃப்ரீ பயணங்களை அல்லது ஒரு வருடத்துக்கு இலவச டோல் பயணத்தை கொடுக்குது. இந்த திட்டம் ஆகஸ்ட் 15, 2025 முதல் நடைமுறைக்கு வருது.
FASTag வருடாந்திர பாஸ், NHAI மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அறிமுகப்படுத்திய ஒரு புது திட்டம். இது நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பூத்களில் பணம் கட்டாம, ஒரே முறை 3,000 ரூபாய் செலுத்தி, 200 பயணங்கள் அல்லது ஒரு வருடத்துக்கு இலவசமா பயணிக்க உதவுது. இந்த பாஸ், கார், ஜீப், வேன் மாதிரியான தனிப்பட்ட, வணிகரீதியல்லாத வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இது NHAI நிர்வகிக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் மட்டுமே வேலை செய்யும், மாநில நெடுஞ்சாலைகளில் இல்லை.
இந்த திட்டம், அடிக்கடி பயணிக்கிறவங்களுக்கு பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துது. எடுத்துக்காட்டுக்கு, மும்பை-நாசிக் பயணம் செய்யுறவங்க ஆண்டுக்கு 10,000 ரூபாய் வரை டோல் கட்டுறாங்க, ஆனா இந்த பாஸ் மூலமா 75% வரை சேமிக்கலாம்.
தகுதி மற்றும் நிபந்தனைகள்
இந்த பாஸ், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு உள்ள கார், ஜீப், வேன் மாதிரியான வாகனங்களுக்கு மட்டுமே. வணிக வாகனங்கள் (டாக்ஸி, டிரக்) தகுதி இல்லை.
FASTag ஆக்டிவாக இருக்கணும், வாகனத்தோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் (VRN) உடன் இணைக்கப்பட்டிருக்கணும், மற்றும் விண்ட்ஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கணும்.
வாகனத்தின் சேஸிஸ் நம்பரில் மட்டும் பதிவு செய்யப்பட்ட FASTag-கள் இந்த திட்டத்துக்கு தகுதி இல்லை.
இந்த பாஸ், NHAI நிர்வகிக்கும் டோல் பூத்களில் மட்டுமே வேலை செய்யும். மாநில நெடுஞ்சாலைகள் (எடுத்துக்காட்டு: மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே, ஹைதராபாத் ORR) இதில் சேராது.
எப்படி வாங்கறது?
ஆகஸ்ட் 15, 2025 முதல், ராஜ்மார்க் யாத்ரா மொபைல் ஆப், NHAI வெப்சைட் (www.nhai.gov.in), அல்லது MoRTH வெப்சைட் (www.morth.nic.in) மூலமா வாங்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ராஜ்மார்க் யாத்ரா ஆப் அல்லது NHAI/MoRTH வெப்சைட்ல உள்ள டெடிகேட்டட் லிங்கை கிளிக் பண்ணி, வாகனத்தோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் FASTag ID-ஐ உள்ளிடணும்.
3,000 ரூபாய் பணம் செலுத்தணும் (டிஜிட்டல் பேமென்ட் மூலமா).
வெரிஃபிகேஷன் முடிஞ்சதும், பாஸ் ஆக்டிவேட் ஆகி, உள்ள FASTag உடன் லிங்க் ஆகிடும்.
ட்ரிப் கவுண்டிங்: ஒரு டோல் பூத்தைக் கடக்கும்போது ஒரு ட்ரிப் கணக்கிடப்படுது. 200 ட்ரிப்ஸ் அல்லது ஒரு வருடம் முடிஞ்சதும், FASTag வழக்கமான பே-பர்-யூஸ் மோடுக்கு மாறிடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.