நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏழை, எளிய மக்களுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படும் திட்டம் தான் KVP என்ற அஞ்சலக சேமிப்பு திட்டம். மத்திய அரசால் கடந்த 1998ம் ஆண்டு தான் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
பெரும் தொகை இருந்தால் மட்டும் தான் சேமிக்க முடியும் என்பது இல்லாமல், மாதந்தோறும் கிடைக்கும் 500 மற்றும் 1000 ரூபாயை சேமித்துகூட இந்த KVP திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். அதுவும் நீங்கள் 10 ஆண்டுகள் பணத்தை சேமித்தாலே இந்த திட்டத்தின் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
KVP, அதாவது கிசான் விகாஸ் பத்ரா எப்படி செயல்படுகிறது?
கடந்த 01.01.2024ம் ஆண்டு அளிக்கப்பட்ட புதுப்பிப்பின்படி, இந்த KVP திட்டத்திற்கான வட்டி விகிதம் சரியாக 7.5 சதவிகிதமாகும். எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. குறைந்தது 30 மாதங்களாவது இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க வேண்டும். அதே நேரம், 115 மாதங்கள், அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களை கடந்து நீங்கள் பணத்தை சேமிக்கும்போது, அது இரட்டிப்பாகும்.
யாரெல்லாம் இந்த கணக்கை தொடங்கலாம்?
ஒரு தனி நபர், அல்லது மூவர் வரை இணைந்து கூட்டுக்கணக்காவும் இந்த திட்டத்தில் இணைய முடியும். 10 வயதிற்கு குறைவான வயதுடையோர் மற்றும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பதிலாக அவர்களது பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குளை துவங்க கூட இந்த KVP திட்டத்தில் அனுமதி உண்டு. 500 ரூபாய் முதல் கூட உங்கள் சேமிப்பை துவங்கலாம். அதுமட்டுமல்ல, இந்த சேமிப்பில் உங்கள் பணத்தை சேமிக்க உச்ச வரம்பும் இல்லை.
வரி சலுகைகள் மற்றும் பிற பலன்கள்
இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் சுமார் 1.5 லட்சம் வரை வரி சலுகைகள் கிடைக்கும். அதே நேரம் பணத்தை சேமிப்பவர் மரணிக்கும் பட்சத்தில், அவரது நாமினிகள் அந்த பணத்தை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லலாமல், சேமிப்பாளர் இறப்பிற்கு பிறகு, நாமினிகள் அந்த கணக்கில் பணத்தை தொடர்ச்சியாக சேமிக்கவும் முடியும்.
KVPயில் எப்படி இணைவது?
அருகில் உள்ள அஞ்சலகத்தில் வேண்டிய படிவங்களை பெற்று, அதை பூர்த்தி செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் இணைய முடியும். இது அஞ்சலக திட்டம் என்பதால், இதில் பணத்தை சேமிக்க சேமிப்பாளர் பயப்பட தேவையில்லை. மாதந்தோறும் கிடைக்கும் சிறு தொகையை சேமித்து வந்தாலே போதும். தங்களுடைய குழந்தையின் 11வது வயதில், அவர்களுடைய பெயரிலேயே இந்த திட்டத்தை துவங்க முடியும்.
மேலும் மாதம் அவர்களுடைய கணக்கில் சிறு தொகையை சேமித்து வந்தாலே, அவர்கள் கல்லூரி அல்லது மேற்படிப்பிற்கு செல்லும்போது, இரட்டிப்பு லாபத்துடன் ஒரு கணிசமான தொகை அவர்களுக்கு கிடைக்கும். முன்பே கூறியதை போல 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக சேமித்து வந்தால் மட்டுமே, நீங்கள் சேமித்த தொகைக்கான லாபம் இரட்டிப்பாகும்.
நீங்கள் சேமிக்க துவங்கிய இரண்டு ஆண்டுகளில் பணத்தை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்காது. ஆகவே, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை, அல்லது உங்களின் எதிர்கால திட்டத்தை மனதில் கொண்டு இந்த திட்டத்தில் பணத்தை சேமித்தால் பெரிய லாபம் பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்