சேமிப்பு என்று வரும்போது, அதிலிருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அனைவரிடமும் இருக்கும். அப்படி என்றால் அதை செயல்படுத்த, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி பலர் ஏற்கனவே செயல்படுத்தி வரும் ஒரு ட்ரிக் குறித்து தான் இந்த பதிவில் காணவுள்ளோம்.
சேமிப்பு என்று வரும்போது அஞ்சலகம் மற்றும் வங்கியில் செயல்படுத்தப்படும் அனைத்துவிதமான சேமிப்பு திட்டங்கள் குறித்தும் நாம் பார்த்து வருகின்றோம். ஆனால் அதில் கிடைக்கும் வட்டி கொஞ்சம் குறைவாக உள்ளது என்று எண்ணுபவர்கள் இந்த வழியை கையாண்டால் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த முறையில் லாபம் பெற குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பதையும் நாம் முன்பே புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:ஐந்து வருட சேமிப்பு.. ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் "வங்கி சேமிப்பு" திட்டம்!
என்ன சேமிப்பு அது?
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் ஏதேனும் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும். எடுத்துக்காட்டாக வங்கி என்றால் FD திட்டத்தில் சேரலாம், அஞ்சலகம் என்றால் டைம் டெபாசிட் திட்டத்தில் சேரலாம். இரண்டிலுமே சுமார் 10 ஆண்டுகள் வரை 7.5 என்ற சதவிகிதத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்கும்.
வட்டி கணக்கீடு
சரி, நீங்கள் வங்கியில் உள்ள FD திட்டத்தில் உங்களின் 35வது வயதில் சுமார் 3 லட்சம் ரூபாயை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த 10 ஆண்டுகள் அந்த சேமிப்பு அப்படியே இருக்க வேண்டும். பத்து ஆண்டுகளின் முடிவில் உங்கள் 3 லட்சம் ரூபாய்க்கும் வட்டியாக மட்டும் 3,30,000 ரூபாய் கிடைத்திருக்கும். FDயை பொறுத்தவரை மாதந்தோறும் உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.
மேலும் படிக்க:ஒரே ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
அப்படியென்றால், நீங்கள் சேமித்த 3 லட்சம் ரூபாய்க்கு, 10 வருடங்களுக்கு மாதந்தோறும் சுமார் 2,750 ரூபாய் கிடைத்திருக்கும். ஆகவே நீங்கள் வட்டியாக வரும் அந்த 2,750 ரூபாயை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வங்கியில் உள்ள SIP திட்டத்தில் சேமித்து வர வேண்டும். சுமார் 12 சதவிகித வட்டியுடன் 10 ஆண்டுகளின் முடிவில் உங்கள் வட்டிக்கு மட்டும் 2,86,000 ரூபாய் வட்டி கிடைத்திருக்கும்.
ஆக.. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் சேமித்த 3 லட்சம் ரூபாய் + உங்களுக்கு FD சேமிப்பில் வட்டியாக கிடைத்த 3,30,000 ரூபாய் + SIPயில் அதற்கு வட்டியாக கிடைத்த 2,86,000 ரூபாய் என்று மொத்தம் 9 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கும்.
பயம் வேண்டாம்
நீங்கள் சேமித்த தொகைக்கு 3 மடங்காக லாபம் கிடைக்கும் என்றால், அதில் ரிஸ்க் அதிகமாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். நீங்கள் நிதானமாக அனைத்தையும் கணக்கிட்டு உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வட்டியை சேமிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சேமிப்பு என்று வரும்போது நமது பணத்திற்கு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை சோதித்துப்பார்க்க நாம் மறக்க கூடாது. மேலும் இதில் எந்தவித சட்ட சிக்கலும் இல்லை.
நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு, வட்டியை சேமிக்கும் முறை தான் இது. நிச்சயம் உங்களால் இந்த முறையில் உங்கள் பணத்திற்கான அதிக லாபத்தை ஈட்டமுடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்