மறுபிறவி இருக்கிறதா? - இதை படித்ததும் உங்கள் மனம் நம்பலாம்! உலகையே உலுக்கிய சாந்தி தேவி கதை

நான்கு வயதில், அவர் தன் பெற்றோரிடம், தன் வீடு புது தில்லியிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள மதுரா என்ற ஊரில் இருப்பதாகவும், தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
சாந்தி தேவியின் உலகை உலுக்கிய மறுபிறவி கதை
சாந்தி தேவியின் உலகை உலுக்கிய மறுபிறவி கதை சாந்தி தேவியின் உலகை உலுக்கிய மறுபிறவி கதை
Published on
Updated on
2 min read

பல சந்தர்ப்பங்களில், குழந்தையின் கூற்றுகள் இறந்த ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் இறப்புடன் துல்லியமாகப் பொருந்துகின்றன. பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்படும்படி, சில குழந்தைகளுக்கு இறந்த நபரின் உடலில் இருந்த காயங்கள் அல்லது தழும்புகளுடன் ஒத்துப்போகும் மச்சங்கள் அல்லது பிறவிக் குறைபாடுகள் உள்ளன. இது பற்றி பலருக்கும் பல கருத்துக்கள் உள்ளது. சிலர் இதை நம்பினாலும் பலர் இதை நம்புவதில்லை. ஆனால் சில குழந்தைகள் தங்களின் முன்ஜென்மம் நியாபகம் வந்ததாக கூறியுள்ளனர். அதில் ஒன்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில், 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இந்தியாவின் டெல்லியில் பிறந்தவர்தான் சாந்தி தேவி. அவர் மூன்று வயது வரை பேசவில்லை. ஆனால் பேசத் தொடங்கியவுடனேயே, தனது முற்பிறவியைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார். நான்கு வயதில், அவர் தன் பெற்றோரிடம், தன் வீடு புது தில்லியிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள மதுரா என்ற ஊரில் இருப்பதாகவும், தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய பெற்றோர் சிறு குழந்தை ஏதோ சொல்வதாக நினைத்து அதை தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சாந்தி தேவி வீட்டை விட்டு ஓடிப்போகவும் முயன்றுள்ளார், ஆனால் அதில் தோல்வியடைந்துள்ளார். மேலும் அடிக்கடி தன் தாயிடம், அவர் தன் உண்மையான தாய் அல்ல என்றும் கூறிவந்துள்ளார். அவர் அசைவ உணவை உண்ண மறுத்து, “எனக்கு சத்வ உணவு வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்(சத்வம் என்றால் சைவம்). பள்ளி செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவரை பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளியிலும் கூட, அவர் தன் முந்தைய வாழ்க்கை கணவர், தான் எப்படி இறந்தார்? என்பது பற்றிப் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இவரது இந்த செயல் முறைகள் ஆசிரியர்களால் தவிர்க்கப்பட்டாலும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் காதிற்கு சென்றுள்ளது. சாந்தி மதுரா வட்டார மொழியைப் பயன்படுத்துவதையும், அவர் சொல் மிகவும் சீராக இருப்பதையும் தலைமை ஆசிரியர் கவனித்துள்ளார். அவருக்கு சாந்தியின் கூற்றுகள் உண்மையாகத் தோன்றின.

சாந்தி தன் கணவரை “கேதார்நாத் சோபே” என்று அழைத்துள்ளார். சாந்தி தேவி குறிப்பிடும் நபருக்கு முகவரியிட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார். எந்தப் பதிலும் வரும் என்று அவர் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடிதம் ஒன்று தலைமை ஆசிரியருக்கு வந்தது. அவர் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மதுராவில் கேதார்நாத் என்ற பெயருடைய ஒரு வணிகர் உண்மையிலேயே இருந்திருக்கிறார். அவருடைய மனைவி, 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மகன் பிறந்த 10 நாட்களுக்குப் பிறகு இறந்துள்ளார். இதனையடுத்து கேதார்நாத், சாந்தியை பார்க்க டெல்லி நோக்கி விரைந்தார். சாந்திக்கு அவருடைய முந்தைய பிறவி கணவர் யார்? என்று உண்மையிலேயே தெரியுமா? என்பதைச் சோதிப்பதற்காக, கேதார்நாத் சாந்தியிடம் சொல்ல வேண்டாம் என்றும், தான் தன் அண்ணனைப் போல நடந்துகொள்வதாகவும் கூறி சாந்தியின் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்தார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். சாந்தி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் தனது கணவரை உடனடியாக அடையாளம் கண்டுள்ளார். மேலும் தனது மகனைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார். அதன் பிறகு, சாந்தி கேதார்நாத்துடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவர்கள் மிகவும் பொதுவான விஷயங்கள் முதல் அந்தரங்கமான விஷயங்கள் வரை பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார்கள். அவர் பேசுவதையும், அவர் கூறிய, இருவருக்குமே தெரிந்த சில விஷயங்களை கேட்டு, "சாந்தி உண்மையிலேயே தனது மறைந்த மனைவியான லுக்டி தேவியின் மறுபிறவிதான்" என்று கேதார்நாத் இறுதியாக நம்பினார்.

1935-ல், இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, மகாத்மா காந்தி இந்தப் பிரச்சினையைச் சுதந்திரமாக விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார். இதனையடுத்து சாந்தி தேவி தனது குடும்பத்தினருடன் மதுராவிற்கு சென்றுள்ளார். அங்கு சாந்தியை பார்க்க பலரும் குழுமி இருந்தனர். மேலும், சாந்தி சரியாக தன் கணவரின் அண்ணன் காலில் விழுந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மாறியிருந்த விஷயங்கள் அனைத்தையும், தன் வீட்டிற்குச் செல்லும் வழியையும், தான் குளித்து வந்த கிணற்றையும், தான் பணத்தை மறைத்து வைத்திருந்த ஓர் இடத்தையும் கூட சாந்தி ஆணையத்திடம் சுட்டிக்காட்டினார். அந்த ஆணையம் 1936-ல் தனது அறிக்கையை வெளியிட்டது. அது சாந்தி தேவியின் வழக்கிற்கு இசைவாக அமைந்ததோடு, அவர் உண்மையில் லுங்டி தேவியின் மறுபிறவிதான் என்றும் முடிவு செய்தது. இவரின் இந்த மறுபிறவி கதை உலகளவில் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளது.

உலகெங்கிலும் இது போன்ற சில சம்பவங்கள் சில நடந்துள்ளன. நம்ப சற்று கஷ்டமாக இருந்தாலும், மறுக்கமுடியாத உண்மை இதில் இருப்பதால், பேச்சிற்கிடமின்றி இது உண்மை என்று இந்த விஷயத்தையும் சரி, மற்ற முன்ஜென்ம கதைகளும் சரி நம்பப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com