
ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்.
நீங்கள் உடலுறவை முறையாகக் கையாண்டால் நிறைய ஆரோக்கிய பலன்களை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா!? ஆம்… முறையான பாதுகாப்பான உடலுறவின் மூலம் நிறைய ஆரோக்கிய பலன்கள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை பாதிக்காதா? என்ற கேள்வி எழுதுவது பொதுவான ஒன்றுதான்.
ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் உடலுறவு கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர சீர்குலைக்காது. மேலும் சில சமீபத்திய ஆய்வுகள் உடலுறவால் உயிர் கொல்லி நோய்களை தடுக்க முடியும் என்றும் சொல்கின்றன.
ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் குறையும் வாய்ப்பு!!
ஜான் ஹாப்பின்’ஸ் -ன் கூற்றுப்படி ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை உடலுறவுகொண்டு உச்ச இன்பத்தை அடையும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது’ என தெரிவிக்கிறது.
மெட்டாவின் மற்றொரு சமீபத்திய ஆய்வில் வாரத்திற்கு இருமுறை சீரான அளவில் உடலுறவு கொள்வது ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி அதன் மூலம் சருமம், மற்றும் இதய நோய் சார்ந்த பிரச்னைகளை கணிசமாக குறைப்பதாகவும் மேலும் இள வயது மரணங்களை குறைப்பதாகவும் சொல்லியுள்ளது.
ஆனால் அதே வேளையில், வருடத்திற்கு 12 முறைக்கும் குறைவாக உடலுறவில் ஈடுபடும் நபர்களுக்கு மன ரீதியான பிரச்சனைகள், இதய கோளாறுகள், இள வயது மரணங்கள் ஆகியவை அதிகரிக்கும் அபாயமும் உண்டு.
எனவே சீரான, ஆரோக்கியமான உடலுறவு உங்கள் உடலுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.