தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பொதுமக்கள் கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகி, வெளியே செல்லவும் பெரிதும் சிரமப்படுகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சில மாவட்டங்களில் வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை மேலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலை ஏற்படுத்தும் பாதிப்புகள்
கடுமையான வெயிலில் நேரடியாக இருப்பதால் உடலில் நீர்சத்து குறைவதோடு, உப்புச்சத்து மற்றும் மினரல்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, சிறுநீர் குறைவு, மயக்கம் போன்ற பல்வேறு உடல்நல குறைகள் உருவாகக்கூடும். கடுமையான சூழ்நிலையில், வெப்பநிலை மிக அதிகமாகும்போது, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உடலின் இயல்பு செயல்பாடு பாதிக்கப்படலாம். இது சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படச் செய்யக்கூடும்.
வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்.
தயிர், மோர், பழச்சாறு போன்ற குளிர்பாணங்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும் போது, உடலை வெயிலில் நேரடியாக காட்டாமல் பாதுகாக்க சுடர் கணுக்காலியில் துணி அணிய வேண்டும்.
கடுமையான வெயிலில் வெளியே செல்ல வேண்டிய அவசியமிருந்தால், உடனடியாக தண்ணீர் மற்றும் நீர்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு செல்ல வேண்டும்.
கட்டடத் தொழிலாளர்கள், காவல்துறையினர், வெளிப்புற வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற அதிகளவில் வெயிலில் நேரடியாக இருப்பவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, அடிக்கடி ஓய்வு எடுத்து, நிழலான இடங்களில் தங்க வேண்டும்.
அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் கௌரிசங்கர் பேட்டி
அவசர சிகிச்சை நிபுணர் கூறியதாவது, "கடுமையான வெப்பநிலையில் நீர்ச்சத்து குறைவதாலேயே உடல்நிலை பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள நீர் வற்றிய நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.
வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் என்பது சருமம், படர்தாமரை, தலை வலி ,தலை சுற்றல் , உடல் சோர்வு இன்னும் பல நோய்கள் வரக்குடியவையாகும்.
வெளியே செல்லும்போது முக்கியமாக குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பாக, கட்டட வேலை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் அதிகளவில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது சிறந்தது" என்று தெரிவித்தார்.
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டு, கோடைக்காலத்தை சுகமாக கடைப்பிடிப்பது அனைவரின் கடமையாகும். உடல்நலத்திற்கேற்ப உணவுகளை உண்டு, நீர்ச்சத்து நிறைந்தவைகளை உட்கொள்வதன் மூலம், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.
மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ராகுலுடன் செய்தியாளர் சுரேஷ்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்