நம்ம வயதுடன் சேர்ந்து காதலும் வளருமா?

நினைத்ததை போல நடக்காத பட்சத்தில் நம் மன அழுத்தம் அதிகரிக்கும் நிலைக்கு செல்லும்...
நம்ம வயதுடன் சேர்ந்து காதலும் வளருமா?
Published on
Updated on
2 min read

காதலில் விழாதவர்கள் யாரும் இல்லை. அதில் முதல் காதல் என்ற நினைவு மட்டும் வாழ்க்கை முழுவதும் அழியாத தடம் பதிக்கும். மக்கள் எவ்வளவு காதலைப் பற்றி பேசினாலும், உண்மையான தீவிரமான காதல் பெரும்பாலோரின் வாழ்க்கையில் சில முறை மட்டுமே வந்து செல்கிறது. நாம் எத்தனை முறை காதலில் விழுந்தாலும் உண்மையான மற்றும் தீவிரமான காதல்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமாம்.

டீனேஜ் காதல் ஒரு கனவு மாதிரி. அது திடீர்னு வரும் அதற்கு காரணமோ பகுத்தறியும் நிதானமோவெல்லாம் தேவையில்லை. அந்த கனவு நிலை நாம் நினைத்ததை போலவே எல்லாம் இருக்க வேண்டும், மேலும் அதில் கவனத்தை தேடும் , பயத்துல பிடிச்சு வைச்சுக்க தோணும் மற்றும் அவர் perfect ஆக இருக்கனும்னு எதிர்பார்க்கும். இதை நாம் உளவியல் ரீதியாக அணுகினால் டீனேஜ் வயசுல prefrontal cortex (நியாயமா யோசிக்குற பகுதி) முழுமையாக develop ஆகாது என்றும் ஆனால் amygdala (emotion center) ரொம்ப activeஆக இருக்கும் எனவும் அறிவியல் சொல்கிறது.

டோபமைன் எனும் ஒரு வகை சுரப்பி நம்ம மூளையில் சுரக்கும் ஒரு “reward chemical". டோபமைன் என்ற ஹார்மோனை ஒரு இலக்கை அடையும்போது மற்றும் பிடித்தமான செயல்களைச் செய்யும்போது .மூளையில் மகிழ்ச்சி உணர்வைத் தூண்டுகிறது. மேலும் அதை மீண்டும் செய்ய தூண்டும்.

இது எப்போது அதிகமாக சுரக்கும் என்று தெரியுமா? புதிய crush வந்தா, அவர் message பண்ணினா, Unexpected call வந்தா, முதல் தொடுதல், முதல் காதல் சொல்லும் போது என எல்லாமே புதிய அனுபவங்களாக இருக்கும் பட்சத்தில் மேலும் அது நம்மை மகிழ்விக்கும் போது. அப்போ என்ன ஆகும்? இதய துடிப்பு அதிகமாகும், ஆர்வம் அதிகரிக்கும், அந்த மனிதரை மீண்டும் மீண்டும் நினைக்க தோணும். இது எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் எதுவும் இல்லை ஆனால் நாம் நினைத்ததை போல நடக்காத பட்சத்தில் நம் மன அழுத்தம் அதிகரிக்கும் நிலைக்கு செல்லும்.

இருபதுகளுக்கு பின்னான காதல் அமைதியாக இருக்கும். அதுல வார்த்தைகள் குறைவு ஆனால் அர்த்தம் அதிகம். நான் ஒருவரை தேர்வு செய்கிறேன் எனும் கமிட்மென்ட் மனநிலை அப்போது தான் வரும். இருபதுகளுக்கு பின்னான காதல் decision making , உறுதியான மனநிலை மற்றும் அதை கையாளும் திறன்களுடன் இருக்குமாம். இந்த காதலில் தவறுகளை சுட்டிக்காட்டுவதை குறைத்து, "அவருக்கும் Flaws இருக்கும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதை மாற்றிக்கொள்ள இருவருக்கும் வாய்ப்பு இருக்கு" எனும் புரிதல் இருக்கும். இந்த மனநிலையில் தான் அந்த காதல் வலுப்பெறும் முழுமையாகும். இதில் Career, goals, சுயமரியாதை பற்றிய தெளிவுகள் இருக்கும்.

இதை உளவியல் ரீதியாக அணுகினால், ஒரு உறுதியான பிணைப்பில் இருக்கும் பொது நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனும் சுரப்பி சுரக்கும். இது அன்புக்குரிய சந்தித்து, ​​கைகுலுக்கும் போது,அல்லது அவர்களை ​​கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் சுரந்து வந்து மகிழ்ச்சி தருகிறது. ஆக்ஸிடாஸின் “bonding hormone”ன்னு சொல்வாங்க இது நம் மனநிலையை பாதுகாப்பதோடு ஒரு அமைதியையும் கொடுக்குமாம்.

இருபதுகளுக்கு பின்னான காதலில் dopamine குறையாது மேலும் அதோட சேர்ந்து oxytocin, நம்பிக்கை, புரிதல் என எல்லாமே இருக்கும். ஒரு காதலின் ஆரம்பத்தில் dopamine அதிகம் இருக்கும் மற்றும் டோபமின் எல்லா வயதிலும் இருக்கும். ஆனா மெட்சுரிட்டி dopamine-ஐ தீர்மானிக்கும் மற்றும் சரியாக கையாளும். அனுபவம், விழிப்புணர்வு, தன்னறிவு அதிகமானால் தான் காதல் நிலைக்கும்.

காதல் வயதோடு வளராது; ஆனால் நம்ம மனம் வளரும்போது காதலின் அர்த்தம் மாறும். ஒரு கட்டத்தில் அது வெறும் மகிழ்வாக இருக்கும், மற்றொரு கட்டத்தில் அது பொறுப்பாக மாறும். பிடித்து வைத்துக் கொள்ள நினைத்த காதல், பின்னர் மறுக்க முடியாத உறவாக மாறுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com