
இந்திய துணைக்கண்டம் தன்னளவில் மனித குலத்திற்கு தேவையான பல அறிவியல் நுட்பங்களை புதைத்து வைத்துள்ளது. "தேவையும் பயன்பாடுமே"மனிதனின் பரிணாம வளர்ச்சியின் துவக்கபுள்ளி என்றாலும், அந்த தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது மேலும் அதற்கான அறிவியல் வழிமுறைகளை கண்டறிந்து வைத்துள்ளனர்.
எந்த ஒரு கண்டுபிடிப்போ பயன்பாடோ அது காலம் கடந்தும் நிலைத்திருந்தால் தான் அதன் நோக்கம் முழுமையடையும் . அந்த வகையில் உடலையும் இந்த பிரபஞ்சத்தையும் பற்றிய இந்தியர்களின் புரிதல் அபரிமிதமானது. ‘அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது’ உள்ளது என்ற சித்தர்களின் கூற்றுப்படி இயற்கையையும் மனித உடலும் எவ்வாறு இணைத்துள்ளது என்பதை நம்மால் அறியமுடிகிறது.
இந்தியாவில் பல தியான முறைகள் இருந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான தியான முறைதான் விபாசனா.
விபாசனா என்றால் என்றால் ?
விபாசனா என்ற சொல்லின் அர்த்தம் ‘உள்ளதை உள்ளபடி பார்த்தல்’ ஒரு மனிதர் தனது உணர்வுகளை எவ்விதமான தீர்மானமும் இன்றி, விருப்பு வெறுப்பின்றி ஆராயும்போது, கவனிக்கும்போது தங்கள் உடல் மற்றும் மனதில் சீரான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதே ஆகும்.
இதில் உடலும் மனமும் உணர்வுகளும் ஒரே சேர கவனிக்கப்படுவதால் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விபாசனாவின் சிறப்பம்சம்;
விபாசனா தியானம் முழுக்க முழுக்க ஒரு அறிவியல் முறை ஆகும். சடங்குகளுக்கோ, அல்லது எந்தவிதமான சமய வழிபாடுகளும் இல்லாத தூய முறை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய துணைக்கண்டத்தில் அனைவருக்குமான சமைய சாயமற்ற சமத்துவமான ஒரு நடைமுறை இருந்தது ஆச்சர்யம்தான்.
இது மற்ற தியான முறைகளை போன்றதல்ல உண்மையைச்சொல்லப்போனால் இது சற்று கடினமான பயிற்சியே ஆகும். மேலும் இந்த பயிற்சி முறை சாதி, மத, நிற வேறுபாடின்றி அனைவருக்கும் இன்றளவும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
விபாசனாவை மீட்டெடுத்த புத்தர்!!
விபாசனா தியான முறை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்திய மண்ணிலிருந்து காணாமல் போயிருந்தது. ஆனால் கவுதம புத்தரே
இந்த தியான முறையை மீண்டும் கண்டறிந்து அனைவருக்கும் போதித்தார்.
மேலும் புத்தரின் காலத்திலிருந்தே உடல் மற்றும் மன பிணிகளை அகற்றுவதற்கும், ஏன்? மெய் ஞானத்தை (Enlightment) அடைவதற்கு கூட வழிவகை செய்ததாக கூறப்படுகிறது.
பிரபலங்களின் வாழ்வை மாற்றிய விபாசனா!
இந்த பயிற்சி முறை பலர் வாழ்வை புரட்டிப்போட்டிருக்கிறது ஏற்படுத்தியிருக்கிறது, அதில் நாம் வியந்து பார்க்கும் மனிதர்களின் வாழ்வும் அடக்கம். பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட பெரும் ஆளுமைகளின் விருப்ப நூல்களின் ஒன்றான சேப்பியன்ஸ் (தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் ஹியுமன்கைன்டு) என்ற புத்தகத்தை நம்மில் பலர் படித்திருக்காவிட்டாலும் கண்டிப்பாக கேள்வியாவது பட்டிருப்போம்.
இந்த புத்தகத்தின் எழுத்தாளர் ‘யுவல் நோவா ஹராரி’ இவர் ஒரு விபாசனா பயிற்சியாளர் என்றால் நம்ப முடியுமா?
அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் ‘விபாசனா தியான பயிற்சி இல்லையென்றால் என்னால் இடைக்கால ராணுவ வரலாறையோ, சைபோர்க்ஸ், நெதர்லாண்ட்ஸ் வரலாற்றை கூட முடித்திருக்க முடியாது என்று கூறியிருப்பார்.
அதற்கு ஏன் என்று மறு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கும்..
“தியான முறை என்னை முழுக்க முழக்க கவனச்சிதறலிலிருந்து காப்பாற்றியது. மூச்சை கவனிக்கும் ஆழ்ந்த பயிற்சிமுறை எனது மனதை கட்டுப்படுத்தும் நுணுக்கத்தையும், காரணங்களை கண்டறியும் திறனையும் என்னுள் வளர்ந்திருக்கிறது,
மேலும் விபாசனா தியான முறை உண்மையில் ஒரு தவம் போன்றது 60 நாட்கள் தனிமையில் பூரண அமைதியில், உயரிய ஒழுக்க கட்டுப்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு உங்கள் மனோதிடத்தை இந்த பயிற்சி முறை சோதிக்கும். ஒரு ஆய்வாளனாக பல கதைகளை வரலாற்று சிதைவுகளை கடக்க நேரிடும்… ஆனால் தற்போது என்கிறார் வருடத்திற்கு 60 நாள்கள் விபசானா பயிற்சி செய்யும் இந்த எழுத்தாளர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்