
வெயில்காலத்துல சிலர் வெப்பத்தை எளிதா தாங்குறாங்க, சிலருக்கு உடம்பு உஷ்ணமாகி உடனே சோர்வு வந்துடுது. இதுக்கு இரத்த வகைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமானு ஆராய்ச்சிகள் நடந்துட்டு இருக்கு. சமீபத்திய ஆய்வுகள் A, O, AB, B மாதிரியான இரத்த வகைகளுக்கு வெப்பத்தை தாங்குற திறன் வேறுபடலாம்னு சொல்லுது.
மருத்துவர்கள் சொல்றபடி, இரத்த வகைகளுக்கும் ஒருத்தர் வெப்பத்தை எப்படி உணர்றாங்கனு நேரடி தொடர்பு இல்லை. ஆனா, சில ஆராய்ச்சிகள் சொல்றது, H மற்றும் A ஆன்டிஜென்கள் இருக்குற இரத்த வகைகள் (A, AB, O) உயிரணுக்களுக்கு வெப்பத்தை தாங்குற தன்மை கொஞ்சம் அதிகமா இருக்கலாம். இது glycosyltransferase என்சைம்களால வருது, இவை உயிரணுக்களை வெப்பத்துல இருந்து பாதுகாக்குது.
இருந்தாலும், இந்த ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடியலை. “இரத்த வகைகள் உடம்பு வெப்பத்தை உணர்றதை நேரடியா பாதிக்காது, ஆனா உயிரணு மட்டத்துல வெப்ப பாதுகாப்பு வேறுபடலாம்”னு டாக்டர் நரேந்தர் சிங்லா சொல்றார். ஆனா, வெப்ப உணர்வுக்கு உடம்பு நீரேற்றம், உடல் எடை, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி மட்டுமே முக்கிய காரணங்களா இருக்கு.
இரத்த வகைகள் வெப்ப உணர்வை நேரடியா பாதிக்கலைனாலும், சில உடல்நல பிரச்னைகளோட தொடர்பு இருக்கு:
O இரத்த வகை: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு இதய நோய்கள், இரத்த உறைவு பிரச்னைகள் வர்ற வாய்ப்பு குறைவு. ஆனா, வயிற்று புண்கள் (ulcers) வர்ற வாய்ப்பு கொஞ்சம் அதிகம் இருக்கலாம்னு ஆய்வுகள் சொல்லுது.
A மற்றும் AB இரத்த வகைகள்: இவை உள்ளவர்களுக்கு H. pylori பாக்டீரியா தொற்று காரணமா வயிற்று புற்றுநோய், புண்கள் வர்ற வாய்ப்பு அதிகம். மேலும், AB இரத்த வகை உள்ளவர்களுக்கு நினைவாற்றல் பிரச்னைகள் வரலாம்னு ஒரு சிறிய ஆய்வு காட்டுது.
B இரத்த வகை: இதய நோய்கள், சில புற்றுநோய்கள் வர்ற வாய்ப்பு கொஞ்சம் அதிகமா இருக்கலாம். ஆனா, இதுக்கு முழு ஆதாரம் இல்லை, இன்னும் ஆராய்ச்சி தேவை.
பாம்பே இரத்த வகை: இந்தியாவில் 10,000 பேரில் ஒருத்தருக்கு இருக்குற இந்த அரிய இரத்த வகை, H ஆன்டிஜென் இல்லாததால, இதே வகை உள்ளவர்களிடம் மட்டுமே இரத்தம் பெற மமுடியும். இதுக்கு தனி இரத்த வங்கி தேவைனு வல்லுநர்கள் சொல்றாங்க.
இரத்த வகை எதுவா இருந்தாலும், வெப்பத்தை தாங்குறதுக்கு சில எளிய வழிமுறைகள்:
நிறைய தண்ணீர் குடிக்கணும்: உடம்பு நீர்ச்சத்து இல்லாம போனா, வெப்பத்தால் சோர்வு, மயக்கம் வரலாம். தண்ணீர், இளநீர், மோர் மாதிரி பானங்கள் உதவும்.
வெயிலை தவிர்க்கணும்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை வெயில்ல வெளியே போகாம இருக்கணும். வெளியே போனா, வெள்ளை அல்லது இளம் நிற உடைகள், தொப்பி பயன்படுத்தலாம்.
மருந்துகளை கவனிக்கணும்: இரத்த அழுத்த மருந்துகள், மனநல மருந்துகள், டையூரிடிக்ஸ் மாதிரி சில மருந்துகள் வெப்ப உணர்வை அதிகரிக்கலாம். இவை எடுத்துக்குறவங்க நீர்ச்சத்து, ஏசி இடங்களை உறுதி செய்யணும்.
உடற்பயிற்சி மற்றும் உணவு: உடல் எடை, வளர்சிதை மாற்றம் நல்லா இருந்தா, வெப்பத்தை எளிதா தாங்கலாம். 25-30 கிராம் நார்ச்சத்து, புரதம் நிறைந்த உணவு, 7-9 மணி நேர தூக்கம் உதவும்.
இரத்த வகைகளுக்கும் வெப்ப உணர்வுக்கும் நேரடி தொடர்பு இல்லைனு ஆய்வுகள் சொன்னாலும், A மற்றும் H ஆன்டிஜென்கள் கொண்ட இரத்த வகைகள் உயிரணு மட்டத்துல வெப்பத்தை சற்று தாங்கலாம்னு சில ஆராய்ச்சிகள் காட்டுது. ஆனா, இது இன்னும் முழுமையான ஆதாரமாக இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.