உடலுறவின்போது பெண்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷன்!? உங்க பாட்னரிடம் இத மட்டும் கேக்கமா விட்றாதீங்க!!

உடலுறவின்போது பெண்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷன்!? உங்க பாட்னரிடம் இத மட்டும் கேக்கமா விட்றாதீங்க!!
love making
love making
Published on
Updated on
2 min read

ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்.

நீங்கள் உடலுறவை முறையாகக் கையாண்டால் நிறைய ஆரோக்கிய பலன்களை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா!? ஆம்… முறையான பாதுகாப்பான உடலுறவின் மூலம் நிறைய ஆரோக்கிய பலன்கள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை பாதிக்காதா? என்ற கேள்வி எழுதுவது பொதுவான ஒன்றுதான். 

ஆனால் சீரான முறையில் வாரத்தில் இரண்டு முறை உடலுறவு கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை பல வகைகளில் மேம்படுத்தும், இதய நோய்கள், உளவியல் சார்ந்த சிக்கல்கள், சருமம் சார்ந்த குறைபாடு என அனைத்திலுருந்தும் விடுபடலாம்.

அதுமட்டுமின்றி அன்புகொண்ட மனிதர்களிடம் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளுதல்,  காதலில் மிகவும் சிறப்பான அம்சமாகும். 

எனவே உங்களின் இணையருடன் படுக்கையில் நல்ல உரையாடலை வைத்திருப்பது மிகவும் அவசியம் .  அதிலும் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையிலேயே உடலுறவு வைத்துக்கொள்ளாமல் வெவ்வேறான முறைகளை  முயற்சி செய்துபாருங்கள். அதிலும் சில பொசிஷன்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அப்படி பெண்களுக்கு பிடித்த சில பொசிஷன்கள் பற்றி இதில் காண்போம்…

எப்போதும் செக்ஸ் என்றால், வெறும் Penetration மட்டும் அல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். முன் விளையாட்டுகள் என்று சொல்லப் படும்  foreplay  -ல் ஈடுபட வேண்டும்.

மேலும் பெண்கள் பெரும்பாலும் ‘மிஷினரி’ என சொல்லப்படுகிற காதல் நிலையில் கலவி கொள்ளும்போதுதான், தங்களின் உச்சபட்ச இன்பத்தை அடைக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இது எல்லாருக்கும் பொருந்தாது, சிலருக்கு இது மாறுபடலாம். ஆனால் மிஷினரி நிலையில் தான் உங்கள் இணையரின் கண்களை உங்களால் காண முடியும், காதிற்குள் பேச முடியும், மேலும் இந்த பொசிஷன் ஆண் பெண் இருவருக்கும் மிகவும் வசதியாக ஒரு காதல் நிறைந்த நிலையாக பரவலாக கருதப்படுகிறது. 

பெரும்பாலான நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது என்பது வெறும் எந்திரத்தன்மையான் செயலாக இருக்கிறது. தம்பதியர் இருவரும் அதற்கான நேர்த்தியும் கவனத்தையும் ஒதுக்க வேண்டும். ஆணோ பெண்ணோ தங்கள் பார்ட்னரிடம் முன் அனுமதி பெற வேண்டும், நீங்கள் நினைக்கலாம் என் கணவனிடமோ மனைவியிடமோ சந்தோஷமாக இருக்க நான் ஏன் அனுமதி பெற வேண்டும் என்று, ஆம் நிச்சயம் அவர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும். மனிதர்கள் சமயங்களில் தாங்கள் காதலிக்கும் மனிதருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை மரித்துவிடுவார்கள் அதுவும் குறிப்பாக பெண்கள் கணவர் சந்தோசமாக இருக்கட்டுமே என்று பல விஷயங்களில் வாய் மூடி மௌவுனியாக இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் வெடிப்பார்கள், திருமண உறவில் இந்த சிக்கல்களை தவிர்க்க எப்போதும் அவர்களின் விருப்பத்தை கேட்பது அவசியம்.மேலும் அவர்கள் வேண்டாம் என்று ஒரு முறை சொன்னால் கூட நோதான், அவரக்ளை சமதப்படுத்தி உடலுறவுக்கு அழைத்தாள் அது அவர்களுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கும்.

உடலுறவுக்கு முன்னர் நீங்கள் உங்கள் சில  முக்கிய  கேள்விகளை உங்கள் இணையருடன் கேட்க வேண்டியது மிக மிக அவசியமானது.

  1. உங்களை மரியாதையுடன் நடத்துகிறேனா?

  2. உங்களை நன்றாக புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

  3. உங்களுக்கு மேலும் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?

  4. நம் எதிர்காலப் பாதையில் நீங்கள் நம்பிக்கை கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

  5.  நான் எந்த ஒரு குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

  6. என்னிடம் உள்ள எந்த பழக்கத்தை குறைக்க வேண்டும்?

  7. உடலுறவின்போது நான் செய்யும் எதுவும் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கிறதா?

  8. என்னோடு மகிழ்ச்சியாக உள்ளீர்களா!?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com