இனிமேல் 24 மணி நேரமில்லை! பூமியின் நாள் 25 மணி நேரமாக மாறுமா? அதிர்ச்சி அறிவியல் உண்மை

நாசாவின் அறிக்கைகளின்படி, பூமியின் சுழற்சி படிப்படியாக வேகம் குறைந்து வருகிறது என்றும் அதனால் ஒருநாளைக்கு 25 மணி நேரமாக மாறும் என்றும் கூறுகின்றனர்.
25 மணி நேர பகல் பொழுதாக மாறும்.
25 மணி நேர பகல் பொழுதாக மாறும். 25 மணி நேர பகல் பொழுதாக மாறும்.
Published on
Updated on
2 min read

நாம் வாழும் இந்த பூமியில் ஒரு நாள் என்பது எப்போதும் 24 மணி நேரம் நீடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனை மக்கள் நிரந்தரமானது மற்றும் நிலவியது என்று நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 'பூமியின் சுழற்சி முற்றிலும் நிலையானது அல்ல' என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே கவனித்து வருகிறார்கள். பூமியானது படிப்படியாக வேகம் குறைந்து வருகிறது. அதாவது, ஒரு நாளின் நீளம் அதிகரித்து வருகிறது என்பதாகும். இருப்பினும், இந்த அதிகரிப்பு நம் அன்றாட வாழ்வில் கவனிக்க முடியாத மிகச் சிறிய அளவிலேயே நிகழ்கிறது. பூமி ஒரு சீரான வேகத்தில் சுழல்வதில்லை. அது தன் அச்சில் சுழன்று, ஏறக்குறைய ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முழுச் சுற்றை நிறைவு செய்கிறது. நாசாவின் அறிக்கைகளின்படி, இந்தச் சுழற்சி படிப்படியாக வேகம் குறைந்து வருகிறது என்று கூறுகின்றனர். அதாவது, ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கும் ஒரு நாள் சுமார் 1.7 மில்லி வினாடிகள் நீளமாகிறது. இந்த மாற்றம் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. இதனால் கடிகாரங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சரி செய்யவும் தேவையில்லை. இருப்பினும், துல்லியமான அறிவியல் கருவிகளால் இந்த வேறுபாட்டை அளவிட முடியும் என்றும் நீண்ட காலத்திற்கு பிறகு இது குறிப்பிடத்தக்க இடத்தை பெரும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானதிலிருந்து, கோளின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது. இது பூமியின் மீது செயல்படும் புற விசைகளால் உருவாகும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக சந்திரன் கூறப்படுகிறது. அதன் ஈர்ப்பு விசை பூமியை ஈர்த்து, கடல்களில் ஓதங்களை உருவாக்குகிறது. இந்த ஓதங்கள் வெறும் நீரோட்டங்கள் மட்டுமல்ல. அவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஆற்றலையும் பரிமாற்றம் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆற்றல் பரிமாற்றம் பூமியின் சுழற்சியை சற்றே மெதுவாக்குகிறது. பூமி தனது சுழற்சி ஆற்றலை இழக்கும்போது, ​​சந்திரன் அதை பெற்றுக்கொண்டு கோளிலிருந்து மெதுவாக விலகிச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியிலிருந்து சுமார் 3.8 சென்டிமீட்டர் தொலைவிற்கு மேலும் விலகிச் செல்வதாக அளவீடுகள் காட்டுகின்றன. பூமியின் கடந்த காலத்தில், பகல் பொழுதுகள் மிகவும் குறுகியதாக இருந்தன என்பதைக் காட்டுகிறது. டைனோசர்களின் காலத்தில், ஒரு நாள் சுமார் 23 மணி நேரம் நீடித்தது.

இன்னும் பின்னோக்கிச் சென்றால், தொடக்க கால பூமி மிக வேகமாகச் சுழன்றது, அப்போது பகல் பொழுதுகள் சுமார் 18 மணி நேரமாக இருந்ததாக புதைபடிவச் சான்றுகள் கூறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் சுழற்சியானது, திடீர் மாற்றங்களால் அல்லாமல், சீரான, நீண்ட கால இயக்கமாக, காலப்போக்கில் படிப்படியாக உருவாகிவருகிறது. இது உடனடியாக நிகழாது என்றும், பூமியின் சுழற்சி மெதுவாக, சுமார் 20 கோடி ஆண்டுகள் ஆகலாம் என்று அறிவியல் மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்தக் கால அளவு மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. கண்டங்கள் நகரும், காலநிலைகள் மாறும், மேலும் உயிரினங்கள் விரிவாகக் கணிக்க முடியாத வழிகளில் தொடர்ந்து பரிணமிக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com