இன்று [மார்ச் 28 ] ரயில்களில் பயணம் செய்யும் ,பெண்களுக்கு என தனி வாட்ஸ் அப்- குழுவினை தொடங்கியுள்ளது .இந்த குழுவின் மூலம் நடக்கும் குற்றங்களை அவ்வப்போதே கண்டறிந்து தீர்வு காண முடியும் என தெரிவிக்கிறது தமிழக அரசு.
எங்கு சென்றாலும் பெண்களுக்கு, பாதுகாப்பு என்பதே இல்லை, என்பது மறுக்கமுடியாத ஒன்று , முன்பைப்போல இல்லாமல், இன்று அனைத்து பெண்களும், தனக்கான கனவுகளை, நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன .
ஒரு தனியார் நிறுவனத்தி தரவுப்படி , இன்றைய சூழலில் நூறு சதவிகித பெண்களில், என்பது சவிகித பெண்கள், வேலைக்கு செல்பவர்களாகவே, இருக்கின்றனர் .அதிலும் ஐம்பது சதவிகித பெண்கள் தொலை தூரங்களில் , வேலை செய்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான ,பெண்கள் பயணங்களுக்கு , தொடர்வண்டிகளையே பயன்படுத்துகின்றனர்.ஏனெனில் பேருந்துகளில் பயணம் செய்வதை விட தொடர்வண்டிகளில் பயணம் செய்வதே ஏதுவாகவும் , நினைக்கும் இடத்திற்கு விரைவாகவும் செல்ல முடிகிறது .
பெண்கள் தொடர்வண்டிகளில் , அதிகம் பயணம் செய்வதை அறிந்த ரயில்வே துறை , பெண்களுக்கு என தனி பெட்டிகளை அமைத்து கொடுத்தது , சில பெண்களுக்கு பொது பெட்டிகளில் ஆண்களோடு சேர்ந்து பயணம் செய்வது அசௌகரியமாக இருப்பதினாலும்,பெண்களுக்கு போதிய இடம் கிடைக்காததினாலும் , பெண்களின் பாதுகாப்பிற்கும் , இத்தகைய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது.
இருப்பினும் ரயில்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது , அதிக பட்சமாக கிட்டத்தட்ட , ஐநூறு குற்றங்கள் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு நடந்ததாக பதிவாகி உள்ளது.
இந்நிலையில் ,2025 பிப்ரவரி 6 அன்று, வேலூர் அருகே கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். இதில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்தாது ரயில்வே துறை .அண்ணல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார் .
மீண்டும் , இதே ஆண்டு பிப்ரவரி 10 அன்று, தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ரயிலில் 26 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவர் விறைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் காரணமாக , போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர்.
இதனை அடுத்து அதிரடி வேட்டையில் இறங்கிய காவல் துறையினர் பிப்ரவரி 20 அன்று, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பெட்டிகளுக்கு, அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 899 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அதுமட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் ரயில்களில் அவ்வப்போது பெண்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில்வே காவல் துறையினர் ரயில்களில் இருப்பதனை உறுதி செய்தனர்.
இவ்வறை எல்லாம் கருத்தில், கொண்ட தமிழக காவல் துறையினர் , ரயிலில் பயணம் செய்யும் பெண்களுகேன ஒரு வாட்ஸ் அப் குழுவினை தொடங்கியுள்ளது , இதன் மூலம் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பினை, மேம்படுத்துவது அவர்களின் பயனர்களுக்கு உதவுவது , குற்றவாளிகளை அடையாளம் காண்பது போன்ற செயல்களை செய்ய முடியும் என்கிறது காவல் துறை .
இந்த வாட்ஸ் அப் குழுவில் , அன்றாடம் அந்த ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் , சிறு தொழில் செய்வோர், ரயில்வே போலீசார் , தமிழ்நாடு காவல்துறையினர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்