``டாடா குழுமம் சீரழிக்கப்படுகிறது.. மோடி, ஷா கட்டுப்பாட்டில் தொழில்துறை" - ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு என்ன?

``எத்தனை காலம் தான் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களையே முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை அமைதி காக்கப் போகிறீர்களா?" - ராகுல் காந்தி
Tata Group Being Ruined, Industry Under Modi-Shah Control: What is Rahul Gandhi's Allegation?
``டாடா குழுமம் சீரழிக்கப்படுகிறது.. மோடி, ஷா கட்டுப்பாட்டில் தொழில்துறை" - ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு என்ன?AI Generated
Published on: 
Updated on: 
1 min read

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு டாடா குழுமத்தில் சிக்கல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு குறித்த பிரச்சினை சமீபத்தில் பூதாகரமாகியுள்ளது.

டாடா குழும இயக்குநர்கள் கூட்டத்தில் என். சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இயக்குநர்கள் கூட்டம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள அவர், அந்தக் கூட்டம் நடைமுறைப்படி நடைபெறவில்லை என்பதால் பதவி நீட்டிப்பு செல்லாது எனக் கூறி வருகிறார். அத்துடன், இயக்குநர்களின் வாக்கெடுப்பு குறித்த ஆவணங்களையும் கோரியுள்ளார்.

டாடா குழுமம் தனது வணிகச் செயல்பாடுகளுடன் சமூக வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதற்காகப் பெயர் பெற்றது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூக நலப் பணிகளுக்கும் நிதியுதவிகளுக்கும் பங்களித்து வருகிறது.

இந்தப் பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பது டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts). டாடா குழுமத்தின் முதன்மை ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனத்தின் சுமார் 66 விழுக்காட்டுப் பங்குகள் பல்வேறு அறக்கட்டளைகளிடம் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் ஈவுத்தொகை சமூக நல முன்னெடுப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் சீரழிக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தனது எக்ஸ் தளப் பதிவில், "டாடா நிறுவனம் குற்றவியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்தவொரு வணிகத் தலைவரும் ஒரு வார்த்தைகூட பேசத் துணியவில்லை.

எத்தனை காலம்தான் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களையே முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை அமைதி காக்கப் போகிறீர்களா?

இந்தியத் தொழில்துறை என்பது மோடியின் அல்லது ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களுக்குத் தைரியம் இல்லை. ஆனால், எங்களுக்கு இருக்கிறது. இந்த அநீதிகளுக்கு நிச்சயம் நீதியைப் பெற்றுத் தருவோம்" என்று கூறியுள்ளார்.

டாடா குழும விவகாரத்தில் பாஜகவின் பங்கு என்ன என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்காத நிலையில், அவரது பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tata Group Being Ruined, Industry Under Modi-Shah Control: What is Rahul Gandhi's Allegation?
``சொந்த ஊருக்கு வரவே 'அவமானமாக' இருக்கிறது.. தவெகவின் வார்த்தை லஞ்சம்!" - ஓப்பனாக சீமான் சொன்ன விஷயம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com