அடைமழை வெளுத்து வாங்க போகுது…! “வழக்கத்தை விட அதிகமான பருவ மழைக்கு வாய்ப்பு”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் இதுகுறித்து ....
rain in tamilnadu
rain in tamilnadu
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மழைக்காலம் துவங்கிவிட்டது. மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்ய துவங்கிவிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் இன்றயை தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் எந்ததெந்த மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமா உள்ளிட்ட வடகிழக்கு பருவமழை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர்,

வடகிழக்கு பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் கேரளா தெற்கு உள் கர்நாடகம் கடலோர ஆந்திர பிரதேசம் பகுதியில் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் மிக கனமழையும், 7  இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை பதிவான மழை அளவு 10 சென்டிமீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.  இன்றைய தேதி வரை இயல்பு நிலையில் இருந்து 7  சென்டிமீட்டர் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 16  நாட்களில் மழை அளவு  இயல்பிலிருந்து 37 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என கூறினார்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிகளில் கேரளா கர்நாடகா பகுதிகளில் அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் வரும் 24ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவடைய சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு எனவும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

அடுத்து 5 தினங்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளத.  நாளை சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.  40 செண்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகும் அது தான் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பதிவாகம் மழையின் அளவு.  ஆனால் 50 சென்டிமீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு இந்தாண்டு இருக்கும். அக்டோபர் மாதத்தில் இயல்புநிலை 17 சென்டிமீட்டர் மழை பொழிவு இருக்கும் ஆனால் இன்றைய தேதி வரை 10 cm மழை பதிவாகியுள்ளது எனவும் அதுவும் இயல்பை விட அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதத்தில் உள்ள வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் புயல்கள் உருவாக வாய்ப்பு அதிகம், ஆனால் எத்தனை உருவாகும் என்பதை இப்போது கணிக்க முடியாது எனவும் வரும் 24ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைய வாய்ப்புள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் கூறினார். வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு இருக்கும்.  மேக வெடிப்பு காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு மழை பொழிவு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு

நுங்கம்பாக்கம் மீனம்பாக்கத்தில் மட்டும் தான் கடந்த காலத்தில் வானிலை ஆய்வு மையம் கண்காணிக்க முடியும் இப்பொழுது பல தரவுகள் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட தரவுகளை வைத்து கண்காணித்து வருகிறோம். மேக வெடிப்பு பத்து சென்டிமீட்டர் மழை ஒரு மணி நேரத்தில் பெய்கிறது அந்த தரவுகள் நம்முடைய உள்ளது எனவே தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.

இன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை அதற்குள் தீவிரமடைந்ததா என்ற கேள்விக்கு கடந்த 24 மணி நேரத்தில் gபெய்த மழை அளவை பொறுத்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது என்று குறிப்பிடுகிறோம் என தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com