"எங்களை காப்பி அடித்துவிட்டனர்.." ஆப்பிளை கலாய்த்த சாம்சங்; இந்தியாவில் மட்டும் விலை உயர்வு ஏன்?

ஆப்பிள் டுயோவின் மடக்கக்கூடிய வடிவமைப்பு சாம்சங் கேலக்ஸி Z மாடலில் இருந்தும் அந்தப் பெயர் duolingo நிறுவனத்தில் இருந்தும் காப்பி அடிக்கப்பட்டதாக அந்த பதிவு சுட்டிக்காட்டியது.
Apple vs Samsung: "எங்களை காப்பி அடித்துவிட்டனர்.." கலாய்த்த சாம்சங்; இந்தியாவில் மட்டும் விலை உயர்வு ஏன்
Apple vs Samsung: "எங்களை காப்பி அடித்துவிட்டனர்.." கலாய்த்த சாம்சங்; இந்தியாவில் மட்டும் விலை உயர்வு ஏன்
Published on
Updated on
1 min read

ஐஃபோன் 18 மற்றும் மடக்கக்கூடிய டுயோ (Due) மாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக அதன் போட்டியாளர்களாக கருதப்படும் சாம்சங் மற்றும் கூகுள் உட்பட சில நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் பங்காக கலாய்த்துள்ளான. ஆப்பிளின் மடக்கக்கூடிய மொபைலை தனது மொபைலுடன் ஒப்பிட்டு தங்கள் வடிவமைப்பு காப்பி அடிக்கப்பட்டதாக சாடும் பதிவுகளை வெளியிட்டது சாம்சங்.

ஐஃபோன் டுயோ அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அமெரிக்க கணக்கு சாம்சங் மொபைல் யூ.எஸ் (Samsung Mobile US) தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியது.

எக்ஸ் தளத்தில் சாம்சங், "என்னை மன்னியுங்கள், @duolingo. அவர்களும் எங்களையும்தான் காப்பியடித்துள்ளனர் #Solidarity" எனப் பதிவிட்டது.

அதாவது ஆப்பிள் டுயோவின் மடக்கக்கூடிய வடிவமைப்பு சாம்சங் கேலக்ஸி Z மாடலில் இருந்தும் அந்தப் பெயர் duolingo நிறுவனத்தில் இருந்தும் காப்பி அடிக்கப்பட்டதாக அந்த பதிவு சுட்டிக்காட்டியது.

மேலும், "நாங்கள் மீதம் வைத்த உணவைச் சூடாக்கி முடித்ததும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்." என்றும் சாம்சங் கிண்டல் செய்திருந்தது.

விலையில் கார் நிறுவனங்களுடன் போட்டி!

ஆப்பிள் ஐஃபோன் 18 ப்ரோ, டுயோ மொபைல்களின் விலையும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 18 ப்ரோ தொடக்க விலை இந்தியாவில் 1,64,900 ரூபாய். அதிகபட்சமாக 2 TB வகை 3,14,900 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுயோ மொபைலின் ஆரம்ப விலை 2,99,900 ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 2 TB வகை 4,49,900 ரூபாய். ஆப்பிள் தனது உற்பத்திகளுக்கு விலை நிர்ணயிப்பதில் கார் நிறுவனங்களுடன் போட்டி போடுவதாக ஆன்லைனில் விமர்சனங்கள் எழுந்தன.

ஐஃபோன் 18 ப்ரோ, ஐஃபோன் 18 ப்ரோ மேக்ஸ் மற்றும் டுயோ மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிளின் 17, 16 உள்ளிட்ட முந்தைய மாடல்களும் விலையேற்றப்பட்டன.

இந்தியாவில் மட்டும் விலை உயர்வு ஏன்?

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஐஃபோன் விலை அதிமாக இருக்கிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஒரு 17 Pro 256GB மொபைலை இந்திய மதிப்பில் ரூ.1,11,750-க்கு வாங்கலாம். ஆனால் இந்தியாவில் அதன் MRP ரூ.1,34,900. ரூ.23,150, அதாவது 20.7% அதிகம்.

இந்த விலை வித்தியாசத்துக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி வரி உள்ளிட்ட வரி விதிப்புகளும் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு அதளபாதாளத்தில் விழுந்துள்ளதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Apple vs Samsung: "எங்களை காப்பி அடித்துவிட்டனர்.." கலாய்த்த சாம்சங்; இந்தியாவில் மட்டும் விலை உயர்வு ஏன்
"ரோபோட்களும் AI-யும் இணையும் கொடூரம்.." - எச்சரிக்கும் பில்கேட்ஸ்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com