விண்வெளி என்றாலே நமக்கு எப்போதும் ஒரு புரியாத புதிர்தான். நிலவுக்கு மனிதன் போனது பழைய கதை ஆகிவிட்டது, இப்போது உலகமே உற்று நோக்குவது செவ்வாய் கிரகத்தைத்தான். பூமிக்கு மிக அருகில் இருக்கும் இந்தச் சிவப்பு நிறக் கோளில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடி விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பி இருக்கின்றன. அங்கு மனித முகத்தைப் போன்ற ஒரு உருவம் தெரிவதாகவும், சில இடங்களில் பிரமிடுகள் போன்ற அமைப்புகள் இருப்பதாகவும் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் இது உண்மையிலேயே மனிதர்கள் கட்டிய கோபுரங்களா அல்லது வெறும் பாறைகளின் நிழலா என்பதுதான் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அங்கு பல விண்கலங்களை அனுப்பி மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்து வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஆறுகளும் கடல்களும் ஓடியதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இருந்தாலே அங்குக் கண்டிப்பாக உயிர் இருந்திருக்க வேண்டும் என்பது அறிவியலின் அடிப்படை விதி. ஒரு காலத்தில் பசுமையாக இருந்த செவ்வாய் கிரகம் ஏன் இப்படிப் பாலைவனம் போல மாறியது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். வளிமண்டலம் சிதைந்து போனதால்தான் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் அல்லது நிலத்திற்கு அடியில் சென்று மறைந்து வாழ்ந்திருக்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பலர் நம்புவது போல அங்கு ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்குப் பல மறைமுகமான ஆதாரங்கள் சொல்லப்படுகின்றன. நாசா வெளியிடும் புகைப்படங்களில் சில பகுதிகள் மட்டும் ஏன் மழுங்கடிக்கப்படுகின்றன என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அங்கு ஏதோ ஒரு பெரிய ரகசியம் புதைந்து கிடப்பதாகவும், அதைச் சொன்னால் உலகமே பயந்துவிடும் என்பதால் நாசா அதை மூடி மறைப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. குறிப்பாகச் செவ்வாயின் தென் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகளுக்கு அடியில் திரவ நிலையில் தண்ணீர் இருக்கலாம் என்று சொல்லப்படுவது, அங்குப் பாக்டீரியா போன்ற சிறு உயிரினங்கள் இப்போதும் இருப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மெத்தேன் வாயு அவ்வப்போது வெளியேறுவதை விண்கலங்கள் கண்டுபிடித்துள்ளன. பூமியில் மெத்தேன் வாயு பெரும்பாலும் உயிருள்ள ஜீவராசிகளிடம் இருந்துதான் உற்பத்தியாகிறது. அப்படியென்றால் செவ்வாயில் அந்த வாயு எங்கிருந்து வருகிறது? நிலத்திற்கு அடியில் ஏதேனும் உயிரினங்கள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாய் கிரகத்தில் போர் ஏற்பட்டு அங்கிருந்த நாகரிகம் அழிந்து போயிருக்கலாம் என்றும், அதிலிருந்து தப்பி வந்தவர்கள்தான் பூமியில் மனிதர்களாக வாழ்கிறார்களோ என்ற கற்பனைக்கும் கூட விண்வெளி ஆய்வாளர்களிடம் இடம் இருக்கிறது.
இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாகச் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை நேரடியாக அனுப்பும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. அங்கு மனிதர்கள் தங்குவதற்கான வீடுகளை எப்படிக் கட்டுவது, ஆக்சிஜன் எனப்படும் உயிர்க்காற்றை அங்கே எப்படித் தயாரிப்பது என்று பல சோதனைகள் பூமியில் உள்ள பாலைவனங்களில் செய்து பார்க்கப்படுகின்றன. செவ்வாய் மண்ணில் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை விளைவிக்க முடியுமா என்றும் பார்க்கிறார்கள். ஒருவேளை செவ்வாயில் மனிதர்கள் குடியேறத் தொடங்கினால், அங்குப் புதைந்து கிடக்கும் பழைய நகரங்களோ அல்லது புதைபடிவங்களோ கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போதுதான் மனித இனம் முதன்முதலில் எங்கே தோன்றியது என்ற உண்மை உலகிற்குத் தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.