இனி இன்ஸ்டாகிராமில் 'பிரைவசி' கிடையாது. கண்காணிக்கப்படும் தரவுகள்... பயனர்கள் நிலை என்ன?

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' வசதியை நீக்கியதற்கான காரணங்களாக நிறுவனம் கூறுவது, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சில குழந்தைகள் பாதுகாப்பு..
insta privacy
Published on
Updated on
1 min read

மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் உதவிப் பக்கத்திலும், 2022-ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட செய்திப் பதிவிலும், 8 மே 2026 முதல் இன்ஸ்டாகிராமில் பயனர்களுக்கிடையேயான நேரடிச் செய்திகளில் 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' வசதி இனி கிடைக்காது என்று அறிவித்துள்ளது. இதன் பொருள், அனைத்துப் பயனர்களுக்கும் இடையிலான செய்திகளின் உள்ளடக்கங்களை மெட்டாவால் பார்க்க முடியும் என்பதாகும். மேலும், இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு, தங்களது 'சாட்களை' (Chat) பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

முன்னதாக, மெட்டாவின் தலைமை நிர்வாகியான மார்க் ஜுக்கர்பெர்க், 2019-ஆம் ஆண்டில் மெட்டாவின் அனைத்துத் தளங்களிலும் முழுமையான 'எண்டு டு என்கிரிப்ஷன்' வசதியை அறிமுகப்படுத்தும் திட்டங்களை முதன்முதலில் அறிவித்தார், ஆனால் 2023-ஆம் ஆண்டு வரை அதைச் செயல்படுத்தத் தொடங்கவில்லை. முன்னதாக, 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' மூலம் செய்திகளையும், அழைப்புகளையும் உரையாடலில் உள்ளவர்களால் மட்டுமே படிக்கவோ கேட்கவோ முடியும் என்பதை உறுதி செய்தது. குறிப்பாக, ஹேக்கர்கள், மூன்றாம் தரப்பினர், மெட்டா நிறுவனமும் கூட அந்த 'சாட்டு'களை பார்க்கமுடியாது என்று கூறினார். இந்த 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' வசதியை நீக்கியதற்கான காரணங்களாக நிறுவனம் கூறுவது, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ட்' செய்யப்பட்டு செய்தியனுப்புதல், இணையத்தில் குழந்தைகளைக் குறிவைக்கும் குற்றவாளிகளைக் கண்டறிவதையும், அந்த குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுப்பதையும் இது கடினமாக்குகிறது என்று அவர்கள் கூறுவதால் இந்த வசதியை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் முழுமையான 'எண்டு- டு- எண்டுகிரிப்ட்' வசதியை செயல்படுத்தப்படும்போது, ​​அது பாதுகாப்பு அபாயங்களை அதிகரிப்பதோடு, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதம் போன்ற தீங்குகளைக் கண்டறிவதையும் தடுக்கிறது என்று குற்றம் சாட்டினர். மேலும், தங்களது தனியுரிமையை பாதுகாக்க விரும்புவோர் 'வாட்ஸ் ஆப்' செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது மெட்டா நிறுவனம்.

மெட்டா நிறுவனம் தனது செய்தியனுப்பும் செயலிகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரும் எண்ணத்தில் இனி இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் 'எண்டு-டு-எண்டுகிரிப்ட்' நீக்கப்பட்டிருப்பது, இந்த இணைப்புத் திட்டம் முடிந்துவிட்டது என்பதற்கான மற்றொரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com