“Unlimited Data உண்மையிலேயே Unlimited-ஆ?” — பின்னாடி இருக்கும் Trick!

இந்த டிஜிட்டல் உலகத்துல "எதுவுமே இங்க 100% ஃப்ரீயோ அல்லது அன்லிமிடெடோ கிடையாது."
Unlimited Data Plan
Unlimited Data PlanUnlimited Data Plan
Published on
Updated on
2 min read

இன்னைக்கு இருக்குற டிஜிட்டல் உலகத்துல, இன்டர்நெட் அப்படிங்கிறது நம்ம எல்லாருக்கும் மூச்சு காத்து மாதிரி ஆகிடுச்சு. காலையில கண்ணு முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் ரீல்ஸ் பாக்குறது, யூடியூப் வீடியோஸ், ஆன்லைன் கேமிங், வொர்க் ஃபிரம் ஹோம்னு டேட்டா நமக்கு அள்ளி அள்ளி தேவைப்படுது. டெலிகாம் கம்பெனிகளும் இத கரெக்டா யூஸ் பண்ணிக்கிட்டு, "அன்லிமிடெட் டேட்டா பிளான்" (Unlimited Data Plan), "அன்லிமிடெட் 5G" அப்படின்னு பளபளப்பான விளம்பரங்களை போட்டு நம்மள ரீசார்ஜ் பண்ண வைக்கிறாங்க. நாமும் 'அன்லிமிடெட்' அப்படின்ற வார்த்தையை பார்த்துட்டு, எவ்வளவு வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சு சந்தோஷப்படுறோம். ஆனா, இந்த அன்லிமிடெட் விளம்பரங்களுக்கு பின்னாடி நெட்வொர்க் கம்பெனிகள் வச்சிருக்க பெரிய பிசினஸ் ட்ரிக்கும், நமக்கு சொல்லாத சில கசப்பான உண்மைகளும் இருக்கு. அதைப்பத்தி இந்த பத்தில விரிவா பார்ப்போம்.

முதலாவது விஷயம், நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அந்த சீக்ரெட் வார்த்தைதான் "FUP" — அதாவது "ஃபேர் யூசேஜ் பாலிசி" (Fair Usage Policy). நீங்க எந்த ஒரு அன்லிமிடெட் பிளான் ரீசார்ஜ் பண்ணினாலும், அதோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்ல (Terms & Conditions) குட்டியா இந்த FUP விதியை வச்சிருப்பாங்க. இதோட உண்மையான அர்த்தம் என்னன்னா, நீங்க ஒரு குறிப்பிட்ட லிமிட் வரைக்கும் தான் அதிவேக இன்டர்நெட்டை (High-speed data) யூஸ் பண்ண முடியும். உதாரணமாக, உங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 GB அல்லது 2 GB டேட்டா லிமிட் இருக்குன்னா, அந்த லிமிட்டை நீங்க தாண்டுன அடுத்த செகண்டே, உங்களோட நெட் ஸ்பீட் 64 Kbps அல்லது 128 Kbps-ஆ குறைஞ்சிடும். இந்த ஸ்பீட்ல உங்களால ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் கூட ஒழுங்கா அனுப்ப முடியாது. கம்பெனிகள் நெட்டை கட் பண்ண மாட்டாங்க, ஆனா ஸ்பீடை டோட்டலா காலி பண்ணிடுவாங்க. இதுக்கு பேர்தான் அவங்க வச்சிருக்க 'Unlimited' ட்ரிக்!

அடுத்ததா, இப்போ இருக்குற டாப் ட்ரெண்ட் "அன்லிமிடெட் 5G”. 5G போன் வச்சிருக்க எல்லாரும் இப்போ ரீசார்ஜ் பண்ணிட்டு, எவ்வளவு டேட்டா வேணாலும் யூஸ் பண்ணலாம்னு ஆசை ஆசையா ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணி லேப்டாப், டிவினு எல்லாத்துலயும் கனெக்ட் பண்ணி படம் டவுன்லோட் பண்ணுறாங்க. ஆனா, இதுலயும் ஒரு பெரிய செக் வச்சிருக்காங்க. இந்த அன்லிமிடெட் 5G பிளான்களுக்கும் ஒரு கமர்ஷியல் யூஸ் லிமிட் (Commercial Usage Limit) இருக்கு. பொதுவா ஒரு மாசத்துக்கு 300 GB வரைக்கும் தான் ஃபுல் ஸ்பீட் 5G கொடுப்பாங்க. நீங்க அதை தாண்டிட்டீங்கன்னா, நீங்க கமர்ஷியலா நெட்டை யூஸ் பண்ணுறீங்கன்னு சொல்லி, உங்க ஸ்பீடை 4G லெவலுக்கு அல்லது அதுக்கும் கீழ குறைச்சிடுவாங்க. சோ, இங்கேயும் அன்லிமிடெட் அப்படிங்கிறது வெறும் பேப்பர்ல மட்டும்தான்.

மூன்றாவது முக்கியமான விஷயம், "நெட்வொர்க் கன்ஜெஷன்" (Network Congestion) மற்றும் "டேட்டா த்ராட்லிங்" (Data Throttling). கம்பெனிகள் ஏன் இப்படி டேட்டாவுக்கு லிமிட் வைக்கிறாங்கன்னா, ஒரே டவர்ல இருக்குற எல்லாரும் ஒரே நேரத்துல அன்லிமிடெடா நெட் யூஸ் பண்ணா, நெட்வொர்க் கிராஷ் ஆகிடும். அதனால, யாரு அதிகமா டேட்டா யூஸ் பண்ணுறாங்களோ, அவங்களோட ஸ்பீடை நெட்வொர்க் கம்பெனிகள் வேணுமினே குறைப்பாங்க. குறிப்பா நைட் டைம்ல எல்லாரும் ஃப்ரீயா இருக்குறப்போ வீடியோ பார்க்க உட்காருவாங்க, அந்த டைம்ல தான் உங்க நெட் ஸ்பீட் ஆட்டோமேட்டிக்கா கம்மியாகும். நீங்க அன்லிமிடெட் பிளான் வச்சிருந்தாலும், உங்களால அதை முழு வேகத்துல அனுபவிக்க முடியாது.

அதுமட்டும் இல்லாம, இந்த அன்லிமிடெட் டேட்டா பிளான்கள் மூலமா நம்மளோட ஸ்கிரீன் டைம் (Screen Time) ரொம்பவே அதிகமாகுது. "ஃப்ரீயா கிடைக்குது, அன்லிமிடெடா இருக்கு" அப்படின்னு நினைச்சுக்கிட்டு, தேவையில்லாத வீடியோக்களையும், ரீல்ஸ்களையும் பார்த்து நம்மளோட பொன்னான நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணடிச்சுட்டு இருக்கோம். கம்பெனிகள் நமக்கு டேட்டாவை அன்லிமிடெடா கொடுத்து, நம்மளோட கன்டென்ட் கன்ஸ்யூமிங் ஹேபிட்டை (Content consuming habit) அவங்களுக்கு அடிமையா மாத்திடுறாங்க. கடைசியில லாபம் என்னவோ அந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தான்.

சுருக்கமா சொல்லணும்னா, இந்த டிஜிட்டல் உலகத்துல "எதுவுமே இங்க 100% ஃப்ரீயோ அல்லது அன்லிமிடெடோ கிடையாது." கம்பெனிகள் சொல்ற அன்லிமிடெட் அப்படிங்கிறது ஒரு நைஸான மார்க்கெட்டிங் கிம்மிக் (Marketing Gimmick) மட்டும்தான். இனிமேலாவது ரீசார்ஜ் பண்ணுறதுக்கு முன்னாடி, அந்த பிளானோட FUP லிமிட் என்ன, டெய்லி லிமிட் முடிஞ்சா எவ்வளவு ஸ்பீட் குறையும் அப்படிங்கிற கண்டிஷன்ஸை தெளிவா படிச்சு பார்த்துட்டு ஸ்மார்ட்டா ரீசார்ஜ் பண்ணுங்க. விளம்பரங்களை பார்த்து ஏமாறாம, உங்க தேவைக்கு ஏத்த பிளானை சூஸ் பண்ணி, இன்டர்நெட்டை அளவோடும் புத்திசாலித்தனத்தோடும் பயன்படுத்துங்க!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com