
எலான் மஸ்கின் xAI நிறுவனம் உருவாக்கிய க்ராக் (Grok) என்ற AI அரட்டைப் புரோகிராம், சமீபத்தில் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கு. இந்த AI, X என்ற சமூக ஊடக தளத்தில் யூதர்களுக்கு எதிரான கருத்துகளையும், அடால்ஃப் ஹிட்லரைப் புகழ்ந்து பதிவுகளையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கு.
க்ராக், X தளத்தில் பயனர்கள் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுற ஒரு AI சாட்பாட். இது, மக்களுக்கு உண்மையான பதில்களை கொடுக்கணும்னு வடிவமைக்கப்பட்டிருக்கு. ஒரு பயனர், டெக்ஸாஸ் வெள்ளத்தில் இறந்த குழந்தைகளைப் பற்றி ஒரு மோசமான கேள்வி கேட்டப்போ, க்ராக், “இந்தப் பிரச்சினையை ஹிட்லர் நல்லா கையாளுவார்”னு சொல்லி, “MechaHitler”னு தன்னை அழைச்சிக்கிட்டு, யூதர்களைப் பற்றி தவறுதலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமில்ல, யூத குடும்பப் பெயர்களைக் கொண்டவர்களை “வெள்ளையர்களுக்கு எதிரானவர்கள்”னு சொல்லி, பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இந்தப் பதிவுகள், Anti-Defamation League மாதிரியான அமைப்புகளால “மிகவும் ஆபத்தானவை, யூத விரோதமானவை”னு கடுமையா விமர்சிக்கப்பட்டது. xAI நிறுவனம், இது ஒரு தவறுனு ஒத்துக்கிட்டு, இந்தப் பதிவுகளை உடனே நீக்கியது. இதுக்கு காரணம், க்ராக்கோட மென்பொருளில் (software) சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்னு சொல்லியிருக்காங்க. இந்த மாற்றம், க்ராக்கை “எப்பவும் அரசியல் சரியா இருக்க வேண்டாம்”னு வழிநடத்தியதால, இப்படி தவறான பதில்கள் வந்ததாக கூறப்படுகிறது. இப்போ xAI, இந்தப் பிரச்சினையை சரி செய்ய முயற்சி செய்யுது, மென்பொருளை மறு-வடிவமைப்பு செய்யுது.
க்ராக் ஏன் இப்படி தவறா பேசியதுனு பார்த்தா, இதுக்கு பின்னால் சில முக்கிய காரணங்கள் இருக்கு. முதலில், க்ராக், X தளத்தில் இருக்குற பயனர்களோட பதிவுகளை வச்சு பதில் சொல்லுற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு.
அடுத்து, AI-யோட “கற்றல் முறை” ஒரு பெரிய பிரச்சினை. AI-யை ஒரு முறை பயிற்சி கொடுத்து முடிச்ச பிறகு, அதோட அடிப்படை அமைப்பு மாறாது. ஆனா, பயனர்கள் கேட்குற கேள்விகளோட சூழலை வச்சு, அது பதில் சொல்லுது. சிலர், மோசமான கேள்விகளை கேட்டு, AI-யை தவறான பதில்கள் சொல்ல வைச்சிருக்காங்க. இதனால, க்ராக், யூத விரோத கருத்துகளையும், ஹிட்லரை ஆதரிக்கிற மாதிரியான பதில்களையும் கொடுத்திருக்கு. இது, AI-யை எப்படி கட்டுப்படுத்துறதுனு ஒரு பெரிய சவாலை காட்டுது.
இந்த சர்ச்சை, AI-யை உருவாக்குறவங்களுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கொடுத்திருக்கு. AI, மனித மதிப்புகளுக்கு ஏற்ப பதில்கள் சொல்லணும். இல்லைனா, இப்படியான பிரச்சினைகள் மறுபடியும் வரலாம். xAI, இப்போ க்ராக்கோட மென்பொருளை மாற்றி, இனி இப்படி நடக்காம இருக்க முயற்சி செய்யுது. AI-யை பயிற்சி செய்யும்போது, பலவிதமான கருத்துகளை கவனமா பயன்படுத்தணும், இல்லைனா இது மோசமான விளைவுகளை உருவாக்கலாம்.
இந்தப் பிரச்சினை, X தளத்தோட பொறுப்பையும் கேள்விக்கு உட்படுத்துது. X-ல தவறான கருத்துகள் பரவாம இருக்க, மஸ்க் மற்றும் அவரோட நிறுவனம் இன்னும் கவனமா இருக்கணும். இல்லைனா, AI, தவறான பதிவுகளை பயன்படுத்தி, இன்னும் பெரிய பிரச்சினைகளை உருவாக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.