
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பில் “வக்பு சட்டம் தொடர்பாக தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தவெக வரவேற்கிறது. கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ, அதேபோல் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் எதிரி தி.மு.க.வுடனும், கொள்கை எதிரி பா.ஜ.க.வுடனும் ஒருபோது கூட்டணி வைக்கப்போவதில்லை. பா.ஜ.க. உடன் இருப்பதால் அ.தி.மு.க.வுடனும் த.வெ.க. கூட்டணி அமைக்காது. அதிமுக-விற்கு போன தேர்தலிலே மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். இனி அதைப்பற்றி பேசுவது தேவையற்றது.
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணன் திருமாவை நாங்கள் தாக்கவில்லை.திருமாவளவன் வேங்கை வயலுக்கு சென்றார். மக்களை சந்தித்தார். அந்த விவகாரத்தின்போது இந்த அரசை திருமாவளவன் நம்பினார். ஆனால், இந்த அரசு வேங்கைவயலில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை ஏற்படுத்தியது.
திருமாவளவன் அண்ணன் மீண்டும் வேங்கைவயலுக்குச் செல்ல நினைக்கும்போது உளவுத்துறை மூலம் அவரை செல்லவிடவில்லை. இதைத்தான் நாங்கள் கேள்வி கேட்டோம், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு கூட போலீசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. கூட்டணி கட்சிகள் மேல் தொடர்ந்து நிகழ்த்தப்படும் அழுத்தத்தைத்தான் நாங்கள் அம்பலப்படுத்தினோம். திமுக சமூகநீதிக்கான அரசு என திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும்.
காவல்துறையின் தோல்வியால் சாதிய மோதல்கள் உண்டாகிறது எனில் அரசியல் தலைமையைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தலைவர் விஜய்யுடன் பேசி வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் பேசுகிறோம்” என்று கூறியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்