
திருச்சி விமான நிலையத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை பகுதியில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது என்று தெரிவித்தார்..
இந்த மாத தொடக்கத்திலேயே பாரதிய ஜனதா கட்சி அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுடன் இந்த பிரச்சனை தொடர்பாக பேசியதாகவும், நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்ததை தெரிந்துகொண்டு சட்டசபையில் முதலமைச்சர் இப்பிரச்சனை தொடர்பாக நாடகம் ஆடியதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், தமிழகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் முதலில் அவர் டாஸ்மாக் பிரச்சனைக்குதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மேலும், DMK பைல்ஸ் ஒன்று மற்றும் இரண்டை விட பைல் 3 தமிழகத்தில் டெண்டர் அனல் ஆபீஸ் தான் மிகப்பெரிய விஷயமாக இருப்பதாகவும், 2025 ல் கூட்டணி கட்சிகளின் டெண்டர் முறைகேடுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.