
நேற்று குஜராத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தை ஒட்டிய சபீர் என்ற விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைக்கும் “மே டே” அழைப்பு விடுத்த சிறிது நேரத்தில் விமானம் வெடித்து சிதறி அங்கிருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான Boeing 787-8 ‘ விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில் 241 பயணிகள் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாகவும் சேதமடைந்த விடுதியின் கட்டிடத்தை கட்டி தருவதாகவும் அறிவுறுத்தியுள்ளார் டாடா குழுமத்தின் சேர்மன் சந்திரசேகரன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் விபத்தில் காயமடைந்தவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறவும் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்யவும் இன்று அகமதாபாத் வருகிறார் பிரதமர் மோடி. விபத்தில் சிக்கியவர்கள் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் மரபணு பரிசோதனைக்கு பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.