
டெல்லி டயல்பூர் பகுதியில் உள்ள நேரு விஹார் குடியிருப்பில் வசித்து வரும் 45 வயதுடைய பிரேம். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சனிக்கிழமை (ஜூன் 07) இரவு 7 மணிக்கு அவரது 9 வயது மகளிடம் ஐஸ் கட்டிகளை கொடுத்து சிறிது தூரத்தில் இருக்கும் தனது தங்கை வீட்டில் கொடுத்து விட்டு வர சொல்லி இருக்கிறார். அன்று இரவு ஒரு விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதால் சிறுமியின் தாய் கொடுத்து விட்டு சீக்கிரம் வர வேண்டும் என சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் சிறுமி சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பிரேம் தனது தங்கைக்கு போன் செய்து சிறுமியை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு பிரேமின் தங்கை குழந்தை இங்கு வரவில்லை என கூற அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை தேட தொடங்கியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்தவர் குழந்தை பக்கத்துக்கு அபார்ட்மெண்டிற்குள் செல்வதை பார்த்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் அந்த அப்பார்மெண்டிற்குள் உள்ள அனைத்து வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்கவில்லை இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒரு வீடு மட்டும் பூட்டி இருந்துள்ளது.
அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர் காவல்துறையினர் அப்போது வீட்டில் ஒரு சூட்கேசில் ரத்தம் வடிந்த படி இருந்துள்ளது. சந்தேகமடைந்த சூட்கேசை திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் காணாமல் போன சிறுமி ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும். சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து அடித்து கொன்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் உடல் இருந்த வீட்டில் தங்கியிருந்த 35 வயதுடைய நபர் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதற்கு ஏதுவாக அப்பகுதியில் வாழும் மக்களும் அந்த வீட்டில் இருக்கும் நபர் ஏற்கனவே 5 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாகவும். அவ்வழியே செல்லும் சிறுமிகளை வேண்டுமென்றே தனது “சாவியை கீழே போட்டு எடுத்து வரச்சொல்லி அவ்வாறு எடுத்து வரும் சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்வதுதான் அந்த நபரின் வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் அந்த மர்மநபரை கைது செய்ய சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த 35 வயதுடைய மர்ம நபர் தலைமறைவானதால் அவரை போலீசார் டெல்லி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.