மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தனது 9-வது தொடர்ச்சியான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வி துறைக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உயர்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் விதமாக பல உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு என தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI), அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) போன்ற துறைகளில் இந்திய இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்திய கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், 15,000 இடைநிலைப் பள்ளிகளிலும் 500 கல்லூரிகளிலும் உள்ளடக்க உருவாக்குநர் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இந்த ஆய்வகங்கள் மாணவர்களுக்கு டிஜிட்டல் ஸ்டோரிடெல்லிங், அனிமேஷன், கேமிங் வடிவமைப்பு போன்ற திறன்களை கற்பிக்கும் வகையில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறையில் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் ஆயுர்வேத படிப்பிற்கான மூன்று புதிய நிறுவனங்கள் அகில இந்திய அளவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புக்கான வரி இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மருந்துகள் மற்றும் பரிசோதனை கூடங்களின் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் பெண்களின் உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகள் தங்கும் விடுதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.