இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? பரவிவரும் போலி அறிவிப்பும், உண்மையும்!

செப்டம்பர் இறுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இந்த கோரிக்கையும் அடங்கும்.
இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? பரவிவரும் போலி அறிவிப்பும், உண்மையும்!
இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? பரவிவரும் போலி அறிவிப்பும், உண்மையும்!SBI
Published on: 
Updated on: 
1 min read

பொதுத்துறை வங்கிகளில் இனி வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை என்று மத்திய அரசு வெளியிட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தநிலையில் இதில் உண்மை இல்லை என பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வங்கிகளுக்கு தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை நாளாக உள்ள நிலையில், அனைத்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை.

செப்டம்பர் இறுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இந்த கோரிக்கையும் அடங்கும்.

PIB FACT CHECK

இந்த நிலையில் பரவிவரும் போலியான அறிவிப்பு குறித்த பதிவில், "சமூக ஊடகங்களில் பரவி வரும், நிதி அமைச்சகத்தால் (நிதிச் சேவைகள் துறை) வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அரசிதழ், எஸ்பிஐ உட்பட அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு சனிக்கிழமையையும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளதாகக் கூறுகிறது.

பரவிவரும் ஆவணம் போலியானது.

நிதி அமைச்சகம் அப்படியான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை." எனக் கூறியுள்ளது.

PIB Fact Check
PIB Fact Check: holidays for banksPIB Fact Check

ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதில் சுணக்கம், தாமதம் மற்றும் அலுவலக நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மாதத்தில் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்பது விவாதத்துக்குறிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

இனி வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறையா? பரவிவரும் போலி அறிவிப்பும், உண்மையும்!
நடுவானில் ‘விமானிக்கு’ கத்திக்குத்து... நொடிகளில் 17,000 அடி சரிந்த விமானம்! உயிரைப் பணயம் வைத்த ‘இந்திய ஹீரோ’... தீவிரவாத முயற்சியா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com