"உடல் சிதறி உயிரிழந்த ஆறு பேர்" - ஆந்திர மாநிலம் அனக்காவில் தீவிபத்து.. தரைமட்டமான பட்டாசு தொழிற்சாலை!

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு
fire accident.
fire accident.
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி, என்னும் மாவட்டத்தில் உள்ள கொத்த ஊரில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் கட்டிடம் முழுவதுமாக சிதறி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தாது அதில் பணிபுரிந்து வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலை ஏற்பட்ட வெடி விபத்து பற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்தில் பட்டாசு தயாரிக்க உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர் இறந்தவர்களின் குடும்பத்தினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com