
ஆந்திராவில் முதலிரவிற்கு பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அறையை பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை ஸ்வர்ண குமாரி என்பவர் பெயரில் கடந்த 18, 19 ஆகிய தேதிகள் அன்று புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்நிலையில் முதலிரவுக்கு அலங்கரிக்கப்பட்ட அறையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.