
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலக்கா தலைமையில் கடந்த ஜூலை 1 -ஆம் தேதி நடைபெற்றது.
2013ஆம் ஆண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்திறனைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மற்றும் சமூக ஆர்வலர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களோடு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு அந்த துறை சார்ந்த ஆர்வலர்களை அழைத்து வருவது வழக்கம் தான். மக்களிடம் அரசாங்கம் நிலங்களை பிடுங்கும்போது அவர்களின் வாழ்விடத்தை அழிக்க முயலும்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் தான் மேதா பட்கர். அதிலும் பழங்குடியின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர். இந்த நிலைக்குழுவில் மக்கள் பிரதிநிதியாக அவர் சென்றுள்ளார்.
பிரகாஷ் ராஜ் ஏன் அழைக்கப்பட்டார்.
நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் ஏறக்குறைய 8 நாட்கள் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை 8 நாட்கள் நேரடியாக சென்று சந்தித்துள்ளார், அவர்களின் பிரச்னைகளை கேட்டுமக்கள் பிரதிநிதியாக அவர் பங்கேற்றுள்ளார், என காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலக்கா விளக்கமளித்துள்ளார்.
பாஜக -வை அறவிடும் பிரகாஷ் ராஜ்
நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான நடிகர் பிரகாஷ் ராஜ் நீண்ட காலமாக பாஜக எதிர்ப்பை கைகொண்டுள்ளார். இடதுசாரி ஆதரவாளரான பிரகாஷ் ராஜ் அவரது நீண்ட கால நண்பர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையின் போது பாஜக -வை கடுமையாக எதிர்த்தார்.
அதுமட்டுமில்லாது அவர் போகும் நேர்காணலில் எல்லாம் பாஜக அரசை அடித்து தொங்கவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் நீங்கள் பார்த்த மிகப்பெரிய நடிகர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு சற்றும் யோசிக்கமால் “நரேந்திர மோடி.. அவருக்கு என்று தனி உடை வடிவமைப்பாளர் உள்ளனர், அவர் பேசும் பேச்சுகளுக்கு சிறப்பாக Script எழுதி தருகின்றனர், அதைவிட முக்கியம் அவர் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை” என சொல்லி அரங்கத்தை அதிர வைத்திருப்பார்.
ஆனால், கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லாத மேதா பட்கர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதுகுறித்து பாஜக எம்பி புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், ‘தேசிய நலன் சார்ந்த திட்டங்களை எதிர்த்த மேதா பட்கருக்கு இந்தக் கூட்டத்தில் பேச உரிமை இல்லை.
நடிகர் பிரகாஷ் ராஜ் எதற்காக கூட்டத்திற்கு வந்தார்?’ என்றார். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலக்கா கூறுகையில், ‘அவர்களுக்கு மக்களவைத் தலைவரின் அனுமதி இருக்கிறது’ என்றார். ஆனால் இவரது பதிலை பாஜக எம்பிக்கள் ஏற்காமல் வெளிநடப்பு செய்தனர். புருஷோத்தம் ரூபாலா மேலும் பேசுகையில் “இவர்களை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள் என்றால்… பாகிஸ்தான் பிரதமரையும் அழைப்பீர்கள் போலவே” என மோசமாக பேசியிருக்கிறார்.
அஞ்சி நடுங்கும் பாஜக
இந்த போக்கை கருத்தியல் ரீதியாக பாஜக மேதா பட்கர், பிரகாஷ் ராஜை பார்த்து அஞ்சுகிறது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். “மேலும் ஒரு ஜனநாயக நாட்டின் ஈர்ப்பும் இருக்கும் , எதிர்ப்பும் இருக்கும் அதற்காக உங்களை எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கூட்டஹையே நிறுத்துவது, பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நசுக்குவது ஆகும், அதைத்தான் பாஜக மேலும் மேலும் செய்து வருகிறது” என திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.