முன்னாள் மனைவிக்காக.. பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தை அலற விட்ட இளைஞர்.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு தம்பி!

"உங்களுடைய மெட்ரோ ஊழியர்கள், என் முன்னாள் மனைவியான பத்மினியை வேலை நேரம் முடிந்த ...
bomb threat to metro
bomb threat to metro
Published on
Updated on
1 min read

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிறுவனத்திற்கு, ஒரு நபர் அசாதாரணமான ஒரு மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பி இருந்தார். அதில், பணிநிமித்தமாக தனது முன்னாள் மனைவி டார்ச்சர் செய்யப்பட்டால், மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

இந்த மிரட்டல், நவம்பர் 13-ஆம் தேதி இரவு 11:25 மணிக்கு, பி.எம்.ஆர்.சி.எல்-ன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு ஒரு ஜிமெயில் (Gmail) கணக்கிலிருந்து அனுப்பப்பட்டது.

அந்த மிரட்டல் செய்தியில், "உங்களுடைய மெட்ரோ ஊழியர்கள், என் முன்னாள் மனைவியான பத்மினியை வேலை நேரம் முடிந்த பிறகு மனரீதியாகத் துன்புறுத்துவதாக எனக்குத் தெரிந்தால், ஜாக்கிரதை! உங்கள் மெட்ரோ நிலையங்களில் ஒன்று வெடித்துச் சிதறும். கன்னடர்களுக்கு எதிராக நானும் ஒரு தேசபக்தர் (PATRIOTIC) போன்ற தீவிரவாதிதான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, பி.எம்.ஆர்.சி.எல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, மின்னஞ்சலை அனுப்பிய நபரின் அடையாளத்தையும், இருப்பிடத்தையும் கண்டுபிடிக்கும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இதே போன்று சமீபத்தில், பெங்களூருவில் உள்ளப் பல பள்ளிகளுக்குக் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர், குஜராத்தின் அகமதாபாத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பெண் தொழில்நுட்ப ஊழியர் (Techie) என்பது கண்டறியப்பட்டது.

பெங்களூருவில் உள்ள ஒரு பொதுப் பள்ளிக்கு ஜூன் 14 அன்று குண்டு மிரட்டல் வந்ததையடுத்து, இந்த விசாரணை தொடங்கியது. பெங்களூரு முழுவதும் இதேபோன்ற பல போலிக் குண்டு மிரட்டல்கள் வந்ததால், விசாரணையில் அந்தச் செயலுக்குக் காரணமானவர், மென்பொருள் பொறியாளரான ரெனி ஜோஷில்டா என்பவர் என்பது தெரியவந்தது.

தன் காதலன் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால், காதலனின் பெயரைப் பயன்படுத்திப் பல மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக அவள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பிறகு, அக்டோபர் 28 அன்று விசாரணைக்காக அப்பெண் பெங்களூருவுக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி, கேரளா, பீகார், தெலுங்கானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற பல நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் தான் போலிக் குண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துல சண்டைனா, இப்படி வெடிகுண்டு வைப்பேன்னு கிளம்பினா என்ன பண்றது!?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com