இமயமலையில் தொலைக்கப்பட்ட அணு ஆயுதம்!! 60 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை!! “அது மட்டும் நடந்திடவே கூடாது..!!’

நாகசாகி குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தின் அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ...
Nanda_Devi_Peak_
Nanda_Devi_Peak_Harsh!t
Published on
Updated on
2 min read

கடந்த 1965 -ஆம் ஆண்டு,  சீனாவைக் கண்காணிப்பதற்காக, சிஐஏ-இந்தியா கூட்டுப் பணிக்குழு ஒன்று நந்தா தேவி மலையில் புளூட்டோனியத்தால் இயங்கும் ஒரு ‘அணு ஆயுத சாதனத்தை’ விட்டுச் சென்றது. ஆனால் பனிப்புயலில் தொலைந்துபோன அதன் நிலை என்னவென்று தெரியாததால், தற்போது கதிரியக்கப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

1965-ல் பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, ​​சீனா தனது முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து சோதனை பார்த்தது. இதனை தொடர்ந்து  சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் (cia)  இந்தியாவும் சீனாவை கண்காணிக்க  ஒரு இரகசியக் கூட்டு திட்டத்தை  இமயமலையின் உச்சியில் நிகழ்த்தியது. அந்தக்குழு ,  இமயமலையில் அணுசக்தியால் இயங்கும் கருவியை விட்டுச் சென்றது ஒரு, ஆனால் அதை மீண்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்த சாதனம் இந்தியாவின் நீர்நிலைகளை நஞ்சாக்கும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சிஐஏ), திபெத் மற்றும் சின்ஜியாங் பகுதிகளின் உட்பகுதியிலிருந்து வரும் வானொலி சமிக்ஞைகளை இடைமறித்து, சீன ஏவுகணை சோதனைகளைக் கண்காணிக்க விரும்பியது. அதற்கு உயரமான ரகசிய இடம் தேவைப்பட்டது. அதற்க தேர்வு செய்யப்பட்ட இடம்தான் இந்தியாவின் நந்தா தேவி மலை,  இது இந்தியாவின் மிக உயரமான மற்றும் மிகவும் கடுமையான சிகரங்களில் ஒன்றாகும், இது சீன எல்லையை நோக்கிஇருந்தது, உளவு பார்க்க எதுவாக இருந்தது.

ஆராய்ச்சிக்காக மலையேறுபவர்களை போல வேடமிட்டு CIA - இந்தியா கூட்டாக இந்த உளவுப்பணியை துவங்கியது. இந்த குழு கண்காணிப்பு உபகாரணங்களோடு SNAP-19C ஜெனரேட்டரையும் கொண்டுச் சென்றது. இது அணுசக்தியால் இயங்கும் ஒரு கருவியாகும். இது 50 பவுண்டு எடைகொண்ட கருவி. இது வாயேஜர் போன்ற விண்வெளிப் பயணங்களில் பின்னர் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் போன்ற, அதிக கதிரியக்கப் புளூட்டோனியத்தால் இயங்கக்கூடியது. அந்த ஜெனரேட்டருக்குள், நாகசாகி குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தின் அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட புளூட்டோனியம் காப்ஸ்யூல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

1965 அக்டோபரில் அந்த குழு உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பனிப்புயலால், அந்த குழுவை தலைமை தாங்கிய இந்தியக் கடற்படை அதிகாரி கேப்டன் எம்.எஸ். கோலி, முகாமை அப்படியே கைவிட்டு வந்துவிடும்படி வலியுறுத்தினார்.  நீண்டகாலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.  அதனை கீழே கொண்டு வரும் ரிஸ்க்கை எடுப்பதற்குப் பதிலாக, உபகரணங்களைப் பாதுகாத்து, முகாமை கைவிட்டுவிடும்படி அறிவுறுத்தப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அதை மீட்டெடுக்க அந்தக் குழு திரும்பியபோது, ​​பனிச்சரிவு ஏற்பட்டதால், முழு பனிப்பாறை, உபகரணங்கள், கேபிள்கள் மற்றும் ஜெனரேட்டர் அனைத்தும் காணாமல் போயிருந்தன. ஆனால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை ஒருபோதும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பத்திரிகையாளர் ஹோவர்ட் கோன் என்பவர் இந்த சம்பவத்தை கண்டுபிடித்து, 'அவுட்சைட்' பத்திரிகையில் வெளியிட்டார்.இது வெளியானபோது  இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கங்கை நதிக்கு நீர் வழங்கும் பனிப்பாறைகளில் கதிரியக்க மாசுபாடு ஏற்படும் என்று அஞ்சி, சிஐஏ "எங்கள் நீரை விஷமாக்குகிறது" என்று இந்திய போராட்டக்காரர்கள் கடுமையாக கொந்தளித்தனர். 

அந்த சாதனத்தின் வீரியம் வெளிப்பட்டால் என்னவாகும்!!

நந்தா தேவியில் கைவிடப்பட்ட இந்த உபகரணம் அணுசக்தி மூலம் இயங்கும் ஜெனரேட்டர் குண்டு போல வெடிக்காது, ஆனால் அது மீண்டும் கிடைத்தால் மிகப்பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தச் சாதனத்தில் புளூட்டோனியம் உள்ளது, இது அதிக கதிரியக்கத்தன்மை கொண்டது, மேலும் அந்தக் கதிர்வீச்சு முக்கிய உடல் உறுப்புகளுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்.

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலை பனிப்பாறைகள் உருகுவதால், ஜெனரேட்டர் அல்லது அதன் புளூட்டோனியம் காப்ஸ்யூல்கள் பனியிலிருந்து வெளிவரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஒருவேளை  சேதமடைந்தால், கதிரியக்கப் பொருள் உருகும் பனி மற்றும் கங்கை நதியை தரும் நீரோடைகளை மாசுபடுத்தக்கூடும், இது மில்லியன் கணக்கான மக்களுக்கு முக்கியமான நீர் ஆதாரத்தையே நஞ்சாக மாற்றக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com