Delhi_Red_Fort blast
Delhi_Red_Fort blast

டெல்லி குண்டு வெடிப்பு..! பலி எண்ணிக்கை 10 -ஆக அதிகரிப்பு..! 24 -பேர் படுகாயம்..!

இதில் தற்போதுவரை 10 -பேர் பலியாகியுள்ளனர். 24 - பேர் படுகாயம்....
Published on

நாடு முழுக்க பல நாட்களாக, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதனால் ஆங்காங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக  தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • முன்னதாக ஹரியானாவில் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • மாலை 6.50 மணிக்கு டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த மாருதி காரில் வெடிகுண்டு வெடித்ததில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

  • மூன்று முறை வெடிச்சத்தம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

  • உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

  • மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 

  • இதில் தற்போதுவரை 10 -பேர் பலியாகியுள்ளனர். 24 - பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  • மேலும் திடீரென பூகம்பம் போல் சத்தம் கேட்டதாகவும், கார் 300 மீட்டர் தூரத்திற்கு வீசப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com