விமான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தை கருத்தில் கொண்டு, புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்றும்,
அப்படி ஏதேனும் அசாதாரணமாக கட்டணங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அதைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து விமான நிறுவனங்களையும் ரத்து செய்வதற்கும், புவனேஸ்வருக்கு மீண்டும் திட்டமிடுவதற்கும் கட்டணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் காரணமாக விமானங்களில் ஏதேனும் ரத்து மற்றும் திட்டமிடல்கள், அவ்வித அபராதமும் இல்லாமல் செய்யப்படலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம்...!