'கரப்பான் பூச்சி' கட்சிக்கு போட்டியாக வந்தது 'முயல் கட்சி!' யூடியூபர் எல்விஷ் யாதவ்தான் பிரதமரா? "வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்"

கார்கோஷ் ஜனதா கட்சியின் முழக்கம், "கூர்மையான அறிவு, ஆழ்ந்த அறிவு, மற்றும் கேரட்டால் இயக்கப்படும் வளர்ச்சி"
Elvish Yadav latest news
Elvish Yadav latest newsElvish Yadav latest news
Published on
Updated on
2 min read

யூடியூபரும், பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவ், 'கார்கோஷ் ஜனதா கட்சி' (KJP) என்ற கற்பனையான அமைப்பைத் தொடங்கி, இணையத்தின் சமீபத்திய அரசியல் நையாண்டிப் போக்கில் இணைந்துள்ளார். ஜூன் 10 அன்று அறிவிக்கப்பட்ட இந்தக் கேலிக் கட்சி, சமீபத்தில் இணையத்தில் கவனம் ஈர்த்து, நிஜ உலக மாணவர் தலைமையிலான போராட்டங்களாகவும் பரவிய 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு' (CJP) ஒரு நகைச்சுவையான பதிலடி கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது போல் உள்ளது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாதவ், தொடர்ச்சியான சுவரொட்டிகள் மற்றும் முயல்களை மையமாகக் கொண்ட ஒரு அறிக்கை மூலம் இந்த பகடிப் பிரச்சாரத்தை வெளியிட்டார். கார்கோஷ் ஜனதா கட்சியின் முழக்கம், "கூர்மையான அறிவு, ஆழ்ந்த அறிவு, மற்றும் கேரட்டால் இயக்கப்படும் வளர்ச்சி" என்று உறுதியளிக்கிறது என்று அந்த போஸ்டரில் பதிவிடப்பட்டிருந்தது. அதே சமயம், அதன் மூன்று அம்ச செயல்திட்டம் கேரட்டை ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்து, வேகத்தை ஒரு அடையாளமாகக் கொண்டாடி, முயல்களின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த நகைச்சுவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், யாதவ் தனது ஆதரவாளர்களை டெல்லியின் ஜந்தர் மந்தரில் கூடுமாறு அழைப்பு விடுத்தார், மேலும் அங்கு வருபவர்களுக்கு இலவச கேரட் வழங்கப்படும் என்றும் கிண்டலாக தெரிவித்தார். மேலும் அவர், கே.ஜே.பி. கட்சிக்காக ஒரு பிரத்யேக சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கி, தன்னை அக்கட்சியின் நிறுவனராக முன்னிறுத்திக் கொண்டதோடு, வேடிக்கையாக அதன் பிரதமர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு இயக்கமாக சமீபத்தில் உருவெடுத்த, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி'யைச் சுற்றி இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவந்தது. மேலும், சமீபத்தில் அவர்கள் நடத்திய போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவே உருவெடுத்தது.

எல்விஷ் தனது X தளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை கேலி செய்யும் விதமாக சில பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் நடைபெறும் அனைத்து அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் இலவச ரொட்டித் துண்டுகள், வெளிப்படைத்தன்மை அறவே இல்லை (கரப்பான் பூச்சிகள் ஒளியை வெறுக்கின்றன) என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, நான் இனி கரப்பான் ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் விவாதிப்பதில்லை. விவாதங்களை விட பூச்சிக் கட்டுப்பாடு சிறப்பாகச் செயல்படுகிறது என்ற பதிவையும் கிண்டலாக பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் அதனது 'கார்கோஷ் ஜனதா கட்சி' போஸ்ட்டரை வெளிட்டார். தற்போது இணையத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இளைஞர்கள் இந்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் அரசியல் நையாண்டிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com