“உடல்நிலை சரியில்லாத போது உதவிய நண்பர்” - பச்சை துரோகம் செய்த மனைவி.. வசதியாக மாறிய கணவனின் சலூன் கடை!

வீட்டில் இருந்து உணவு மற்றும் தேவையான பொருட்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளா
uma,paramasivm and mani kumar
uma,paramasivm and mani kumar
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உமா என்ற மனைவியும் இரண்டு  மகன்களும் உள்ளனர். பரமசிவன் கடையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் பரமசிவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகுமார் பரமசிவனுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது,  வீட்டில் இருந்து உணவு மற்றும் தேவையான பொருட்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் பரமசிவனுக்கும் மணி குமாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் மணிகுமார். பரமசிவன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு மணிகுமார் பரமசிவனை பார்க்க வீட்டுக்கு போவது வருவது என இருந்துள்ளார். அப்போது உமாவிற்கும்  மணி குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பரமசிவம் வீட்டிற்கும் சலூன் கடைக்கும் 3 கிலோமீட்டர் தூரம் என்பதால் அதிகாலையில் கடைக்கு சென்றால் இரவு 10 மணிக்கு தான் திரும்பி வருவதாக சொல்லப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்ட உமாவும் மணியும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி உமாவிடம் “நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம். எனவே நீ உனது கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு என்னுடன் வந்துவிடு” என அழைத்துள்ளார். மணியுடன் உமா செல்ல மறுத்துள்ளார் இதனால் கோபமடைந்த மணி உமாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  (மே 31)  இரவு உமாவின் மகன்கள் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உமாவும் பரமசிவனும் கீழே உள்ள தங்களது அறையில் தூங்கி உள்ளனர். வழக்கம் போல் அதிகாலை கடைக்கு செல்ல விழித்த பரமசிவன் டீ அருந்த அருகில் இருந்த டீ கடைக்கு சென்றுள்ளார்.

இதனை கவனித்து கொண்டிருந்த மணி உமாவின் வீட்டிற்கு சென்று தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்த உமாவை அறிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் அவரது வழக்கமான வேலைகளை செய்துள்ளார். டீக்கடைக்கு சென்று வீடு திரும்பிய பரமசிவம் மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளார் பரமசிவம். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரரான மணியே உமாவை கொன்றது தெரியவந்துள்ளது. இதை அறிந்து மணியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com