“ஒரே நேரத்தில் 2 தொற்றுகள்!”.. மும்பையை மிரட்டும் மலேரியா, H1N1! மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

இரண்டு கொலைகாரத் தொற்றுகளுக்கு நடுவே சிக்கித் இந்தியாவின் தொழில் நகரம் எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
Mumbai Health Alert
Mumbai Health Alert
Published on
Updated on
1 min read

மலேரியா மற்று பன்றிகாய்ச்சல் எனும் கொடூர தொற்றுக்களால் இந்தியாவின் தொழில் நகரம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குள் மும்பை மாநகராட்சியின் மருத்துவமனைகளில் 441 பேர் இந்நோயின் கொடூரப் பிடியில் சிக்கிப் போராடி வருகின்றனர. இன்னொருபுறம் 4,485 பேரை மருத்துவமனைகளில் முடக்கியுள்ளதுமலேரியா காய்ச்சல். இரண்டு கொலைகாரத் தொற்றுகளுக்கு நடுவே சிக்கித் இந்தியாவின் தொழில் நகரம் எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

எச்1என்1 (H1N1) வைரஸ் மனித உடலில் நுழைந்து குறுகிய காலத்தில் மனிதனின் சுவாச மண்டலத்தையே உருகுலைக்கும் பேராபத்து கொண்டது. நோய்வாய்பட்ட மனிதன் ஒரு முறை வெளிப்படுத்தும் தும்மலில் இந்த வைரஸ் மணிக்கு 100 முதல் 160 கி.மீ வேகத்தில் காற்றில் பாய்ந்து, 6 அடி முதல் 10 அடி தூரம் வரை பயனம் செய்து மற்றோருவரின் உடலுக்குள் ஊடுறுவுகிறது

அடுத்தடுத்து உடலுக்கு இரத்தத்தின் வழியாக பயணிக்கும் இந்த வைரஸ் நுரையிரல் காற்றுப் பைகளை சேதப்படுத்தி சீழ், சளி மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. இறுதியாக பாதிக்கப்பட்ட நோயாளி தரையில் இருந்தபடியே தண்ணீரில் மூழ்குவது .போன்ற கொடூரமான மூச்சுத்திணறலால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான்.

குறிப்பாக AC அறைகளில் மணிநேரக் கணக்கில் நிலைத்து நிற்கும் இந்த வைரஸ் அந்த அறையை கடக்கும் யாரையும் எளிதில் தாக்கி உடலில் சிறிது நேரத்திலேயே தனது கொடூர தாக்குதலை தொடங்க ஆரம்பித்து விடுகிறது இன்னும் சொல்லப்போனால் லிப்ட்-கள், பேருந்து கைப்பிடிகள், கதவு குமிழ்கள், செல்போன் திரைகள் போன்றவற்றின் மீது விழும் வைரஸ், 24 முதல் 48 மணி நேரம் வரை உயிருடன் இருந்து பலிக்கடாக்களுக்காக காத்திருக்கிறது.

கடந்த 2009-ல் மெக்சிகோவிலும் அமெரிக்காவிலும் உற்பத்தியாகி, சில மாதங்களிலேயே உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சடலங்களால் நிரப்பிய அதே அசுர வைரஸ், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே ஏமாற்றி, காற்றுப் பைககளில் சுழற்சி முறையில் பரவி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்கும் இந்த அரூபப் பேரிடர், மும்பையை மட்டுமல்ல, டெல்லி, கர்நாடகா உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலக்களிலும் பெரிய அளவும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அரசு அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் RT-PCR மூலம் H1N1 பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலு தனியார் ஆய்வகங்கள் அதிக கட்டணம் வசூலிக்காதவாறு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளையும் மருத்துவ வசதிகளையும் தாண்டி, பாதிக்கப்பட்டவரின் மூச்சுக் காற்று மூலமாகவே மரணம் மிக அமைதியாக நம்மை நெருங்கக்கூடும் என்பதால்; ஆரம்ப அறிகுறிகளை அலட்சிம் செய்யாமல் இருப்பதே உயிருக்கு உத்தரவாதமாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com