GST Reforms 2025: கல்வித் துறையில் மிக முக்கிய முன்னெடுப்பு.. மாணவர்களுக்கு என்ன லாபம்?

தீபாவளிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின ...
GST refoms 2025
GST refoms 2025
Published on
Updated on
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 'அடுத்த தலைமுறை’ ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும், சிறு வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

தீபாவளிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் தொடர்ச்சியாக வந்துள்ளன. தனது உரையில், பிரதமர், "மக்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு வருவோம்" என்று உறுதியளித்திருந்தார்.

பள்ளி மாணவர்களுக்குப் பெரிய நிம்மதி

இந்தச் சீர்திருத்தங்கள், மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரிய நிவாரணம் அளித்துள்ளன. நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், Eraser-கள், கிரயான்ஸ்கள் மற்றும் ஷார்ப்னர்கள் போன்ற அத்தியாவசிய கல்விப் பொருட்களுக்கு இனி 0% ஜி.எஸ்.டி. வரி மட்டுமே விதிக்கப்படும். மேலும், geometry பாக்ஸ், school cartons மற்றும் trays போன்ற பொருட்களுக்கான வரி விகிதம் 12%-லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு, கல்விப் பொருட்களைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்து, குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்றும், கல்விக்கான அணுகலை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி.யின் புதிய கட்டமைப்பு

இந்தச் சீர்திருத்தங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும். இதன் முக்கிய அம்சம், தற்போதுள்ள பல வரி அடுக்குகளை நீக்கி, 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி அடுக்குகளை மட்டும் உருவாக்குவதுதான். இது வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கும். இந்த மாற்றங்கள், விவசாயம், குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), சுகாதாரம் மற்றும் அதிக தொழிலாளர்களைக் கொண்ட தொழில்கள் உட்படப் பல்வேறு துறைகளில் பெரிய அளவில் வரி விகிதங்களைக் குறைக்கும்.

அத்தியாவசியப் பொருட்கள்: சோப்பு, பேஸ்ட், ரொட்டி, உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் வரி விகிதம் 18% மற்றும் 12% ஆகியவற்றிலிருந்து 5% ஆகக் குறைக்கப்படுகிறது. சில முக்கிய உணவுப் பொருட்களுக்கும், உயிர் காக்கும் மருந்துகளுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஏ.சி, டி.வி, மற்றும் சிறு கார்கள் போன்ற பொருட்களுக்கான வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்படுகிறது.

பான் மசாலா, புகையிலை, குளிர்பானங்கள், சொகுசு கார்கள் போன்ற பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி விகிதம் விதிக்கப்படும்.

பிரதமரின் வாக்குறுதி

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், "அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை அரசு கொண்டு வரும். இது சாமானிய மக்களின் வரிச்சுமையைக் குறைக்கும். இது உங்களுக்குத் தீபாவளி பரிசாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இந்தச் சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்குப் பயனளிக்கும் என்றும், நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com