
பெங்களூர் பகுதியில் ஒரு ஆட்டோ டிரைவரை ஒரு வடமாநில பெண் செருப்பால் அடித்த வீடியோவும், பின்னர் வடமாநில தம்பதிகள் அந்த ஆட்டோ டிரைவரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை பெலந்தூர் பகுதியில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த தம்பதிகள் வேலையை முடித்துவிட்டு மீண்டு தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது சென்ட்ரல் மால் அருகில் சென்ற போது ஒரு ஆட்டோ தம்பதி சென்ற வாகனத்தின் மீது லேசாக உரசி உள்ளது.
இதில் கோபமடைந்த தம்பதி அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் வடமாநில பெண்ணான பன்குரி மிஸ்ரி ஆட்டோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். லோகேஷுக்கும் மிஸ்ரிக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மிஸ்ரி லோகேஷை தான் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். மேலும் கடுமையான வார்த்தைகளால் பேசி காயப்படுத்தியுள்ளார்.
இது ஆட்டோ டிரைவரான லோகேஷின் போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் இது குறித்து பெலந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை விசாரணை செய்த போலீஸ் லோகேஷ் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் அவரை செருப்பால் அடித்தும் கடுமையான வார்த்தைகளை பேசியும் காயப்படுத்திய மிஸ்ரியை கைது செய்துள்ளனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மிஸ்ரி மற்றும் அவரது கணவர். லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கலீல் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மேலும் மன்னிப்பு கேட்கும் போது மிஸ்ரி “ நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதனால் இந்த விபத்தினால் எங்கு குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பதற்றத்தில் கோவத்திலும் இவ்வாறு செய்து விட்டேன். நான் செய்தது தவறு தான் மற்றபடி எனக்கு கர்நாடகா என்றாலும் கன்னட மக்கள் என்றாலும் கன்னட கலாச்சாரம் என்றாலும் மிகவும் பிடிக்கும்” என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்