

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 -ன் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்தசூழலில், தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணி 205 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 96 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையான கட்சியாக மாறியுள்ளது. மேலும் பீகார் அரசியல் களத்தில் MGB கூட்டணி வெறும் 32 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. எனினும், களத்தில் பணம் சார்ந்த வாக்குறுதிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதற்கான ஒரு தெளிவான பாடத்தை இந்த தேர்தல் கற்றுக்கொடுத்துள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகக் குறைவான தொகையைக் கொண்ட ஒரு திட்டத்தைக் கூறி மாபெரும் வெற்றியைச் சுவைத்து உள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மூன்று பெரிய தொகையான ரூபாய் முப்பதாயிரத்தை வாக்குறுதியாக அளித்தபோதும், அது எதிர்பார்த்த வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள "அசுர வலிமை" வெறும் தேர்தல் வியூகம் மட்டுமல்ல, அது திட்டங்களின் நம்பகத்தன்மையையும், அவற்றைச் செயல்படுத்தும் நிர்வாகத் திறமையையும் சார்ந்தது என்பதை இந்த முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் கடந்த ஓராண்டு முழுக்க பீகாரில் நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தது. ஆனாலும், இந்த தேர்தல் முடிவுகள் பாஜக -வுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025ன் முடிவுகள் வெளியாகியது, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட முன்னிலை பெற முடியாமல், போனது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கட்சியான ஜன் சுராஜ் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது, ஆனால் தேர்தல் முடிவுகள் pk -விற்கு எதிராக அமைந்துள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி!
50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாகும்.
தோல்விக்கு யார் காரணம்!?
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியோர் இணைந்து ‘மஹா கட்பந்’ கூட்டணி உருவானது. ஆனால் இந்த கூட்டணி இந்த 2025 தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெரும் என கூறப்பட்டது. ஆனால் கள நிலவரம் அனைத்தையும் மாற்றி எழுதியுள்ளது.
கடந்த ஓராண்டாகவே பீகாரின்மீது நலத்திட்டங்கள் மழை போல பொழிந்தன, ஆனால் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் NDA கூட்டணி பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியது பெரும் பேசுபொருளானது. ஆனால் அந்த ரூ.10,000 தான் இன்று NDA கூட்டணியின் வெற்றியை சாத்தியமாகியுள்ளது.
ஆனால் ‘மஹா கட்பந்தன்’ கூட்டணியின் தோல்விக்கு, கூட்டணியில் நிலவிய சில சிக்கல்களும் காரணம் என சில அரசியல் விமர்சகர் பெருமாள் மணி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், “இந்த தேர்தல் பாஜக ஒரு கட்சியை எப்படி அணுகுகிறது என்பதற்கான ஒரு உதாரணம் . SIR - மீது மிகப்பெரும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுவே முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது. லோக் ஜன் சக்தி கட்சியின் ஷிராக் பஸ்வானை உள்ளே கொண்டு வந்தது மிக முக்கியமான ஒரு நகர்வு 101 - 101 என தொகுதிகளை பங்கு பிரித்துக்கொள்கின்றனர். இவையெல்லாம் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே நடந்துவிடுகிறது.
ஆனால் நீங்கள் அப்படியே ‘மஹா கட்பந்தன்’ -பக்கம் வந்தால் பெயரே சிக்கல். நாடு முழுக்க INDIA கூட்டணி என இருக்கும்போது, பீகாரில் மட்டும் ஏன் ‘மஹா கட்பந்தன்’ என இருக்கிறது என தெரியவில்லை, மேலும் பீகாரிலிருந்து பிரிந்து சென்ற ஜார்கண்டில் இந்தியா கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது, இந்த JMM INDIA கூட்டணிக்கு கடிதம் எழுதுகிறார்கள், “எங்களுக்கு ஒரு 5 சீட்டுகளை தாருங்கள், எல்லைப்புற மாவட்டங்களில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கு” என கேட்டனர். அந்த கடிதத்திற்கு பதிலே இல்லை. MIM -கட்சியின் ஒவைசி 6 சீட்டுதான் கேட்டார். அதற்கும் எந்த பதிலும் இல்லை. மேலும் இந்த விவகாரத்தில் தேஜஸ்வி இணக்கமாக தான் இருந்தார். ஆனால் பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் இந்த தேர்தலை கையாண்டுள்ளது. 36 வயதில் முதல்வர் வேட்பாளர் என ஒருவர் வருகிறர், உங்கள் கட்சிக்கு 30 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த குடும்பம், அவர்களை ஆதரிக்கவேண்டியது காங்கிரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் அதை பொருட்படுத்தவில்லை. ‘வாக்கு திருட்டு’ பிரச்சாரத்துக்கு ராகுல் காந்திக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் வந்தார், ஆனால் தேஜஸ்வி முன்னெடுத்த பிரச்சாரத்துக்கு ராகுல் வரவில்லை. அவர்கள் கூட்டணியாகவே புலப்படவில்லை” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.